அடடா! வாட்ஸ்அப்பில் புளூடூத்தை பயன்படுத்தி 2GB வரை ஷேர் செய்யலாம்!
பலரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப்பில் அடிக்கடி பல நல்ல அப்டேட்கள் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில், நேற்று கூட வாட்ஸப்பில் சேனல் வைத்திருப்பவர்களுக்காகவே பல அப்டேட்டுகளை மெட்டா கொண்டு வந்தது. அது என்னவென்றால், குரல் செய்தி, பல அட்மின், ஸ்டேட்டஸ் பகிர்தல் மற்றும் வாக்கெடுப்பு உட்பட பல புதிய அம்சங்களை கொண்டு வந்தது.
வாட்ஸ்அப் சேனல் வச்சிருக்கீங்களா? உங்களுக்காகவே சூப்பர் அப்டேட்ஸ் இதோ!
அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் கோப்பு பரிமாற்றத்திற்காக ‘புளூடூத் போன்ற’ அம்சத்தை வெளியிட மெட்டா திட்டமிட்டு இருக்கிறது. இப்போது வரவிற்கும் அப்டேட்டின் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப்பில் புளூடூத்தை பயன்படுத்தி அருகில் இருப்பவர்களுடன் 2GB வரையிலான கோப்புகளை ஷேர் செய்யலாம்.
முன்னதாக வாட்ஸ்அப்பில் புளூடூத்தை பயன்படுத்தி எம்பி கணக்கில் அதாவது ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே கோப்புகளை ஷேர் செய்ய முடியும். ஆனால், சிலர் தாங்கள் விரும்பு படங்களையோ அல்லது ஜிபி கணக்கில் இருக்கும் கோப்புகளை பகிர்ந்துகொள்ள முடியாது.
எனவே, அதற்கு ஒரு நல்ல அப்டேட் வருமா என பயனர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில், தற்போது பயனர்களை கவரும் வகையில் மெட்டா நிறுவனம் 2GB வரையிலான கோப்புகளை ஷேர் செய்யும் அசத்தலான அப்டேட்டை கொண்டு வரவுள்ளது. இந்த அம்சம் தற்போது சோதனை கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
சோதனை கட்டம் எல்லாம் முடிந்த பிறகு விரைவில் இந்த அப்டேட் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்து இருக்கிறது. இந்த அசத்தலான அப்டேட் விரைவில் வரவுள்ளதால் பயனர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த அப்டேட் கொண்டு வந்துவிட்டால் அனைவரும் வாட்ஸ்அப்பில் புளூடூத்தை பயன்படுத்தி அருகில் இருப்பவர்களுடன் 2GB வரையிலான கோப்புகளை ஷேர் செய்யலாம்.