வாட்ஸ்அப் செயலியானது, மெசேஜ் யுவர்செல்ஃப் எனும் தனக்கு தானே செய்தி அனுப்பும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்துகிறது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியானது அனைவரும் எதிர் பார்த்த புதிய அம்சமான மெசேஜ் யுவர்செல்ஃப்(message yourself) என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த அம்சமானது ‘மெசேஜ் யுவர்செல்ஃப் ‘ எனும் தனக்கு தானே செய்தி அனுப்பும் அம்சமாகும்.
இதுவரை சோதனையில் இருந்துவந்த இந்த மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சமானது, வருகிற வாரங்களில் பயனர்களின் உபயோகத்திற்கு வரவுள்ளதாக வாட்சப், அறிவித்துள்ளது.
இந்த அம்சத்தின் மூலம் பயனர், தனக்கு தானே செய்திகளை அனுப்ப முடியும், அது மட்டும் அல்லாமல் படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை சேமித்து வைத்து தேவைப்படும் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களும் இந்த ‘மெசேஜ் யுவர்செல்ஃப்’ அம்சத்தை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.
இதுவரை வாட்ஸ்அப் தவிர, இதர செயலியான டெலிக்ராம், ஜிமெயில் போன்ற செயலியில் இது போன்ற அம்சம் ஏற்கனவே இருக்கிறது. இப்பொழுது அதிக பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப் செயலியும், இந்த புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளதாக கூறியது, பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் இந்த அம்சம் வரும் வாரங்களில் பயனர்கள் தங்களது வாட்ஸ்அப்பை அப்டேட் செய்வதன்மூலம் பெற்றுக்கொள்ளலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தனது முக்கியமான குறிப்புகள், தகவல்கள் மற்றும் கோப்புகளை தனக்கு தானே பகிர்ந்து கொள்ள முடியும்.
வாட்ஸ்அப்பில் நண்பர்கள் அனுப்பும் குறும்புத்தனமான புகைப்படங்கள் மற்றும் செய்திகளைத் தனக்குத்தானே பகிர்ந்து, சேமித்து வைத்து கொள்ளமுடியும். அடிக்கடி குறிப்பு எடுக்க விரும்பும் பயனர்களுக்கு இந்த அம்சமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…