WHATSAPP: ‘Delete for me’ விருப்பத்தை செயல்தவிர்க்க 5 வினாடிகள் அனுமதி.!
பயனர்கள் தெரியாமல் அழித்துவிட்ட மெசேஜ்களை, செயல்தவிர்க்க 5 நொடிகள் வரை வாட்ஸ்அப் அனுமதிக்கிறது.
உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. இந்த நிறுவனமானது பயனர்களுக்கு அவ்வப்போது சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு வருவது வழக்கம். அதுபோல வாட்ஸ்அப்பின் சாட்டில் நாம் தெரியாமல் செய்யும் தவறை திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக இந்த முறை புதிய அம்சம் வந்துள்ளது.
வாட்ஸ்அப்பின் சாட் பகுதியில் பயனர்கள் அனுப்பிய மெசேஜை அழிப்பதற்கு “டெலீட் ஃபார் எவ்ரி ஒன்” என்பதற்கு பதிலாக “டெலீட் ஃபார் மீ” என்று தவறுதலாக கிளிக் செய்துவிட்டால் அதனை திருத்திக்கொள்ள 5வினாடிகள் வரை வாட்ஸ்அப், பயனர்களை அனுமதிக்கிறது. இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் அழித்த மெசேஜ் மீண்டும் சாட் பகுதியில் வந்துவிடும்.