இனிமேல் ஒருமுறைதான் கேட்க முடியும்.! வாட்ஸ்அப்பின் புதிய பாதுகாப்பு அம்சம்.!

Published by
செந்தில்குமார்

கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘சாட் லாக்’ மற்றும் சாட் லாக்கிற்கான ‘சீக்ரெட் கோட்’ போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதற்கிடையில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான ‘வியூ ஒன்ஸ்’ (View Once) என்ற அம்சத்தையும் அறிமுகப்படுத்தியது.

இந்த அம்சத்தினால் நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். அதேபோல இந்த புகைப்படங்களை மொபைலில் சேமித்து வைக்கவோ அல்லது ஸ்கிரீன்ஷாட் எடுக்கவோ முடியாது. இப்போது இதே அம்சத்தை வாட்ஸ்அப் பயனர்களின் வாய்ஸ் மெசேஜ் அமைப்பிலும் செயல்படுத்தி உள்ளது. இதனால் பயனர்கள் தங்கள் வாய்ஸ் மெசேஜையும் ஒருமுறை மட்டுமே கேட்கும்படி செட் செய்து அனுப்ப முடியும்.

மீண்டும் அறிமுகமான ‘View Once’ அம்சம்.! டெஸ்க்டாப் பயனர்களுக்கு வாட்ஸ்அப் கொடுத்த அப்டேட்.!

அந்த வாய்ஸ் மெசேஜை நீங்கள் கேட்டவுடன், அதை மீண்டும் கேட்க முடியாது. இதன் மூலம் நீங்கள் தவறுதலாக யாருக்காவது வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டீர்கள் என்றால் இனிமேல் எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம். வாட்ஸ்அப்பில் உங்கள் சாட்டுகள் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுவது போலவே, இந்த வாய்ஸ் சாட்டுகளும் பாதுகாக்கப்படும்.

அதாவது இந்த வாய்ஸ் மெசேஜை நீங்களும், நீங்கள் அனுப்பும் நபரும் மட்டுமே கேட்க முடியும். இந்த வாய்ஸ் மெசேஜ்களுக்கான வியூ ஒன்ஸ் அம்சம் குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மேலும், வரும் நாட்களில் உலக அளவில் வெளியாகும் என்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

இனி சாட்களுக்கு இரட்டிப்புப் பாதுகாப்பு.! வாட்ஸ்அப் வெளியிட்ட அசத்தல் அம்சம்.!

இந்த அம்சத்தை எவ்வாறு செயப்படுத்துவது.?

  • இந்த அம்சத்தை செயல்படுத்த முதலில் நீங்கள் யாருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்ப போகிறீர்களோ அந்த சேட்டை ஓபன் செய்ய வேண்டும்.
  • இதன் பிறகு வழக்கம் போல வாய்ஸ் மெசேஜை கிளிக் செய்து, மேலே இழுத்து லாக் செய்யவும்.
  • இதன் பிறகு அதில் வியூ ஒன்ஸ் என்பதற்கான ஆப்ஷன் காட்டும்.
  • அதனை கிளிக் செய்து வாய்ஸ் மெசேஜை சென்ட் செய்ய வேண்டும்.
  • இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் வாய்ஸ் மெசேஜை ஒருமுறை மட்டுமே கேட்க முடியும்.

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

7 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

9 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

10 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

10 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

11 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

11 hours ago