வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம் இணைப்பு..!!அப்படி என்ன அம்சம்.?

Published by
Dinasuvadu desk

 

பில்லியன் கணக்கான பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப்பில்  – லாக்டு ரெக்கார்டிங்ஸ் (Locked Recordings) என்கிற அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப்பின் பீட்டா சமீபத்திய பதிப்பான பதிப்பான 2.18.102-ல் இந்த புதிய அம்சமானது ஏகப்பட்ட ஆடியோ மெஸேஜ்களை அனுப்பும் பயனர்களுக்கு மிகவும் வசதியான ஒரு அம்சமாகும்.

வழக்கமாக வாட்ஸ்ஆப் வழியாக ஒரு வாய்ஸ் ரெகார்டட் மெஸேஜை அனுப்ப, சாட்டில் உள்ள ரெகார்ட் பட்டனை தொடர்ச்சியாக அழுத்தி, பேசி முடித்த பின்னர் பட்டனை ரிலீஸ் செய்வோம்.

இனி அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒருமுறை அழுத்தினால் போதும். ஒரு வாய்ஸ் ரெகார்டட் மெஸேஜை அனுப்ப ரெகார்ட் பட்டனை ஒருமுறை அழுத்தி ரெகார்ட் செய்யலாம். ரெகார்ட் செய்து முடித்த பின்னர் மறுபடியும் ஒருமுறை அழுத்தினால் போதும். அதாவது ரெகார்ட் செய்ய இனி தொடர்ச்சியாக ரெக்கார்ட் பட்டனை அழுத்த வேண்டியது இல்லை என்று அர்த்தம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ், வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பட்டுள்ள இந்த புதிய லாக்டு ரெக்கார்டிங்ஸ் அம்சமானது தற்போது வரையிலாக சமீபத்திய வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது. எப்போது நிலையான ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு கிடைக்கும் என்பது பற்றிய விரவரங்கள் ஏதும் இல்லை.

ஒருவேளை வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பு பயன்படுத்தியும் கூட, லாக்டு ரெக்கார்டிங்ஸ் அம்சம் கிடைக்கவில்லை எனில், கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று, சமீபத்திய பதிப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

Recent Posts

சென்னையில் நாளை தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

சென்னையில் நாளை தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.…

35 minutes ago

இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் என்ன? புட்டு புட்டு வைத்த தலைவர் நாராயணன்!

சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக…

38 minutes ago

திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழப்பு – இருமாநில அரசு நிவாரணம் அறிவிப்பு.!

ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…

58 minutes ago

வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தத்தை செய்துவிட்டார்? சீமான் ஆவேசம்!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…

2 hours ago

“ஒரே வரியில முடிச்சிருக்கலாம்”..வேல்முருகனை கலாய்த்த துரைமுருகன்!

சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…

3 hours ago

“அஜித் சாருடன் இணைவது விரைவில் நடக்கும்”..லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…

4 hours ago