மெட்டா AI வைத்து வாட்ஸ்அப்பில் என்னவெல்லாம் செய்ய முடியும்.? அடுத்த அப்டேட்…!
வாட்ஸ்அப் : மெட்டா ஏஐ-யால் புகைப்படங்களை எடிட்டிங் செய்யும் புதிய அம்சத்தை வாட்ஸ்-ஆப் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
நம் வாட்ஸ்ஆப்பில் தற்போது மெட்டா AI யுடன் நம்மால், நமக்கு தெறியாத எந்த ஒரு கேள்வியையும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். இந்த அப்டேட் சமீபத்தில் தான் வாட்ஸ்ஆப்பில் அறிமுகமானது. இது வெளியானது முதல் பயனர்கள் பலரும் இதனை வரவேர்த்தனர். மேலும், நாம் சில துல்லியமான விவரங்களுடன் புகைப்படங்களை கேட்டாலும் அது நாம் எண்ணியதற்கு அப்பாற்பட்ட புகைப்படங்களை நமக்கு அனுப்புகிறது.
அதுவும் அப்புகைப்படங்கள் மிக தெளிவாகவும் இருக்கிறது. ஆனால், அதிலும் சில குறைப்பாடுகள் இருப்பதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். அது என்னவென்றால், நம்மால் விவரங்கள் கேட்டே நம்மால் புகைப்படங்கள் பெறமுடிகிறதே தவிர, நம்மால் மெட்டா ஏஐ சேட் பாக்ஸில் (Chat Box) புகைப்படங்களை அனுப்ப முடியவில்லை.
ஆனால், வாட்ஸ்ஆப் பயனர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்பது என்னவென்றால் நமது புகைப்படத்தை மெட்டா ஏஐ நாம் கேட்டவாறு எடிட் செய்து அனுப்ப வேண்டும் என்பதே. தற்போது, இந்த எதிர்ப்பார்ப்புக்கு ஈடு செய்யும் வகையில், விரைவாக இந்த அப்டேட்டை கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த அப்டேட்டை மட்டும் வாட்ஸ்ஆப்பில் கொண்டு வந்தால் நாம் மிக எளிதாகவே நம் புகைப்படங்களை எப்படி வேண்டும் என்றாலும் எடிட் செய்து மாற்றி கொள்ளலாம்.
மேலும், இந்த அப்டேட்டை நல்லவிதமாக பயன்படுத்தினால் தொழில்நுட்பத்தில் ஒரு மாபெரும் வளர்ச்சியாகவே கருதப்படும். ஆனால், அதே நேரம் இதில் சில ஆபத்தான விளைவுகளும் ஏற்பட அபாயமும் இருக்கிறது. ஆனால், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருவதால், இது போன்ற அம்சங்கள் படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கும். மேலும், உள்ளூர் மொழிகளுக்கு ஏற்றவாறு மெட்டா ஏஐ-யை வடிவமைத்து வருகின்றனர், இதுவும் வரும் காலத்தில் நடைமுறைக்கு வந்தால் எளிய பயனர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.