உலகிலே அதிக சேமிப்பு திறன் கொண்ட SD கார்ட் இதுதாங்க! எவ்ளோ சின்னதுனு நீங்களே பாருங்க

Default Image

நமது நினைவுகளை சேமித்து வைப்பதற்கு முன்பெல்லாம் போட்டோ ஆல்பம் போன்றவை இருந்தன. ஆனால், தற்போதைய கால சூழலில் அதையெல்லாம் பெரிய அளவில் யாரும் விரும்புவதில்லை. மாறாக அவற்றை சில தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி ஸ்டோர் செய்து வைத்து கொண்டு அவ்வப்போது பார்த்து மகிழ்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணமாக இருப்பவை பென்டிரைவ், SD கார்ட் போன்றவை தான். கணினி போன்றவற்றில் சேமிக்கும் போது சில நேரங்களில் இந்த வகையான தகவல்கள் வைரஸ், ஓ.எஸ் பாதிப்பு ஆகிய காரணங்களால் தகவல்கள் அழித்து விட கூடும். இந்த பாதிப்பை தடுக்கவே SD கார்ட் போன்றவை உள்ளன.

சாதனை
தற்போது உலகிலே மிக வேகமான மற்றும் அதிக சேமிப்பு திறன் கொண்ட SD கார்டுகளில் இந்த microSD தான் முதல் இடத்தில் உள்ளது. இதை Western Digital என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது. SD கார்டுகளை தயாரிக்கும் மிக பிரபலமான நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

திறன்
இந்த வியக்கத்தக்க SD கார்ட்டின் சேமிப்பு திறன் 1TB ஆகும். இதன் தரவு வாசிப்பு வேகம் 160 MB/s என்பதாகவும், தரவு பாதிப்பு வேகம் 90 MB/s கொண்டதாகவும் உள்ளது. இதன் விலை 450 அமெரிக்க டாலர் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போல பலவித microSD கார்டுகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்