நாங்கள் அனைவரும் ஒன்றாக செயல்படப் போகிறோம்..! சாம் ஆல்ட்மேன்

SamAltman

‘சாட் ஜிபிடி (Chat GPT)’ எனப்படும் ஏஐ சாட் போட்டை உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, கடந்த நவம்பர் 18ம் தேதி அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனை பதவி நீக்கம் செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிவிப்பில், நிர்வாக குழுவிடம் ஆலோசனை செய்தோம். அந்த ஆலோசனையில் ஆல்ட்மேன் தனது நிர்வாக குழுவுடனான தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாக இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதால், சாம் ஆல்ட்மேனை தலைமை நிர்வாக அதிகாரி நீக்கும் முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது.

OpenAI CEO சாம் ஆல்ட்மேன் பணிநீக்கம்.! இணை நிறுவனர் ராஜினாமா..அடுத்தடுத்து அதிர்ச்சி.!

மேலும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரெக் பிராக்மேனும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, ஓபன் ஏஐ முன்னாள் சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் இணை நிறுவனர் கிரெக் ப்ரோக்மேன் இருவரும் மைக்ரோசாப்ட் உடன் இணைய உள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா கூறினார்.

அதன்படி, சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன், சக ஊழியர்களுடன் சேர்ந்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்து புதிய மேம்பட்ட ஏஐ ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்தப் போகிறார்கள். அவர்களின் வெற்றிக்குத் தேவையான வளங்களை அவர்களுக்கு வழங்குவதற்கு விரைவாகச் செல்ல நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்று தெரிவித்தார்.

இதனை உறுதிசெய்து சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், “ஓபன் ஏஐ தலைமைக் குழு, குறிப்பாக மிரா பிராட் மற்றும் ஜேசன் அனைவரும் வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெறும் அபாரமான பணியை செய்து வருகின்றனர். அவர்களை பார்த்து பெருமைப் படுகிறேன்.”

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணையும் சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன்.!

“இப்போது எங்களிடம் முன்னெப்போதையும் விட அதிக ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பு மற்றும் கவனம் உள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்றாக அல்லது வேறு வழியில் செயல்படப் போகிறோம், நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஒரு குழு, ஒரு பணி

“ஓபன் ஏஐ தொடர்ந்து முன்னேறுவதை உறுதி செய்வதே சத்யா மற்றும் என்னுடைய நோக்கம். எங்கள் கூட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இந்த செயல்பாடுகளின் தொடர்ச்சியை முழுமையாக வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஓபன் ஏஐ மற்றும் மைக்ரோசாப்ட் கூட்டாண்மை இதை மிகவும் எளிதாக ஆக்குகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்