உலக அளவில் இந்தியா ஆயுத இறக்குமதியில்  முதலிடம்!

Default Image

உலக அளவில் இந்தியா ஆயுத இறக்குமதியில்  முதலிடத்தில் உள்ளது. சுவீடனை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஸ்டோக்ஹோல்ம் இண்டர்நேசனல் பீஸ் ரீசர்ச் இன்ஸ்ஸ்டியுட்  (Stockholm International Peace Research Institute வெளியிட்டுள்ள விவரங்களின்படி, 2013 முதல் 2017ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலக அளவில் ஒட்டுமொத்தமாக நடைபெற்ற ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 12 சதவீதம் ஆகும்.

இதேபோல, 2008 முதல் 2012 மற்றும் 2013 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் இந்தியா இறக்குமதி செய்த மொத்த ஆயுதங்களில், 62 சதவீதத்தை ரஷ்யாவும், 15 சதவீதத்தை அமெரிக்காவும், 11 சதவீதத்தை இஸ்ரேலும் சப்ளை செய்துள்ளன. ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளில் இருந்து அதிக அளவில் ஆயுதங்களை வாங்கும் நாடாக இந்தியா உள்ளது.

ஆசிய மண்டலத்தில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் அமெரிக்காவும்

இந்தியாவிற்கு ஆயுத விற்பனையின் அளவை அதிகரித்துள்ளது.  பாதுகாப்பு சார் உற்பத்தித்துறையை இந்தியா வலுப்படுத்தத் தவறியதே ஆயுத இறக்குமதி அதிகரிப்புக்கு காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்