இனி பாஸ்வர்ட் எளிமையாக வைத்தால் அதற்கும் தண்டனைதான்! புதுவித சட்டம் வந்துள்ளது!
கால மாற்றம் ஏற்பட ஏற்பட பலவித சட்ட திருத்தங்களும் மாற்றம் பெற்று வந்துள்ளது. மக்களின் வாழ்விற்கு ஏற்பவும், அவர்களின் பாதுகாப்பிற்கு ஏற்பவும் எண்ணற்ற சட்டங்களும், அவ்வப்போது அதற்கான திருத்தங்களும் கொண்டு வரப்படுகிறது. இது மக்களின் வசதிக்கும் வாழ்வாதாரத்திற்கு ஏற்ப மாறுபடும். இன்றைய கால கட்டத்தில் பலவித தீய செயல்கள் நடந்து வருகின்றன.
அதுவும் நவீன முறையில் இவற்றை செய்து வருகின்றனர். குறிப்பாக சொல்லப்போனால் நமது அந்தரங்க தகவல்கள் முதல் அடிப்படை தகவல்களை வரை திருடப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் இதற்கு நாமும் மூல காரணமாக அமைகிறோம். உதாரணத்திற்கு எளிமையான பாஸ்வேர்ட், பொது வெளி வைபை பயன்படுத்துதல், மேலும் அஜாக்கிரதையாக இருத்தல் போன்றவை தான் ஹேக்கர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. இவ்வாறு எளிமையான பாஸ்வேர்ட் வைக்க கூடாது என்பதற்காக ஒரு சட்டம் விதித்துள்ளது இந்த மாகாணம்.
அமெரிக்கா
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தான் இந்த சட்டம் இயற்றப்பட உள்ளது. தனியுரிமைச் சட்டத்தின் படி மிக எளிமையான பாஸ்வேர்ட் வைக்க கூடாது என்பதை தான் முதலில் இது வலியுறுத்துகிறது. காரணம் இப்படிப்பட்ட எளிமையான பாஸ்வேர்ட் தான் பின்னாளில் மிக சுலபாக ஹேக்கர்களால் கண்டறியப்படுகிறது.
ஸ்மார்ட் சாதனங்கள்
நாம் பயன்படுத்தும் ரௌட்டர், கணினி, ஸ்மார்ட் போன் போன்ற எல்லாவற்றிற்கும் ஹேக்கர்கள் கண்டுபிடிக்கும் வகையிலான பாஸ்வேர்ட்டை தான் நாம் வைக்கின்றோம். குறிப்பாக டிபால்ட்டாக உள்ள “அட்மின், பாஸ்வேர்ட்” போன்ற பாஸ்வேர்டுகளை கூட நாம் மாற்றுவது கிடையாது. இதனை கட்டாயம் மாற்ற வேண்டும் என்றும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது. இதனால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் உங்களால் இருக்க இயலும் எனவும் தெரிவித்துள்ளது.
திருடனுக்கு நாமே திருட வழி கொடுக்க கூடாது என்பதை தான் இந்த சட்டம் கூறுகிறது.