Gemini Al : கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த ஜெமினி (AI) சாட்பாட் மீதான சர்ச்சைகள் குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்தார்.
இம்மாதம் தொடக்கத்தில் கூகுள் நிறுவனம், தங்களது Bard என்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-ஐ, புதிய பொலிவுடன் Gemini என பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அதன்படி, புதுப்பிக்கப்பட்ட ஜெமினி AI உலகின் சில பகுதிகளில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் ஜெமினி சாட்பாட் (இமேஜ் ஜெனரேஷன்) குறித்து சர்ச்சை கிளம்பியது.
அதாவது, ஜெமினி சாட்பாட்டில் இன வேறுபாடுகளுடன் வெள்ளை நிறத்தை ஆதிக்கம் செலுத்தும் படங்களை தவறாக சித்தரிப்பதாக சமூக வலைத்தளங்களில் ஸ்க்ரீன் சாட்களை சில பயனர்கள் வெளியிட்டது பூதகரமாக மாறியது. உதாரணமாக வரலாற்று துருப்புகளை வேறொரு இனத்தவரின் துருப்புகளாக சித்தரித்து காட்டியது சர்ச்சையானது.
இதன் மூலம் இன ரீதியான சண்டைகளை உருவாக்குகிறதா? இந்த தொழில்நுட்பம் என்ற சர்ச்சையான விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்தன. அப்போது கூகுள் நிறுவனம் கூறியதாவது, ஜெமினி சாட்பாட், வரலாற்று துருப்புகளை தவறாக சித்தரித்ததை நாங்கள் அறிவோம். அதற்காக மன்னிப்பும் கேட்கிறோம். இது முழுவதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடைபெற்றுள்ளது.
ஜெமினியின் இமேஜ் ஜெனரேஷன் தொழில்நுட்பத்தின் சிக்கல்களைத் தீர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதனை சரிசெய்யும் வரை மக்களின் படத்தை உருவாக்கும் இந்த தொழில்நுட்பத்தை நிறுத்தப் போகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜெமினியின் இமேஜ் ஜெனரேஷன் தொழில்நுட்பத்தின் சர்ச்சை குறித்து கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார்.
அவர், கூறியதாவது. ஜெமினி சாட்பாட்டில் இமேஜ் ஜெனரேஷன் பிரச்சனையால் எங்கள் பயனர்கள் புண்பட்டுள்ளதை நான் அறிவேன். அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான், நாங்கள் தவறு செய்துவிட்டோம். என்ன நடந்தது என்பதை நாங்கள் மறுபரிசீலனை செய்து, அதை உடனடியாக சரிசெய்வோம் என்றும் ஜெமினி இமேஜ் ஜெனரேஷன் தொழில்நுட்பத்தில் உள்ள சிக்கல்களை சரிசெய்ய 24 மணி நேரமும் உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…