வாட்ஸ்ஆப்பில் வந்துவிட்டது புதிய அட்மின் அம்சம்..!!

Default Image

சில தினங்களுக்கு முன்னர், புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திய வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து , சத்தமின்றி அதன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளில் “டிஸ்மிஸ் அஸ் அட்மின்”(dismiss as admin) என்கிற அம்சத்தினை இணைத்தது.

 டபுள் ஸ்டிக்கர்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு அம்சம் உட்பட மொத்தம் 2 ஸ்டிக்கர்ஸ் சார்ந்த அம்சங்களை அடுத்த வாட்ஸ்ஆப் அப்டேட்டில் எதிர்பார்க்கலாம். வாட்ஸ்ஆப் தொடர்பான புதிய வளர்ச்சி பற்றி மேம்படுத்தும் பணிகளை பரிசோதிக்கும் தளமான வாட்ஸ்ஆப் பீட்டா இன்ஃபோவிடம் இருந்து வெளியான அறிக்கையின் படி, டபுள் ஸ்டிக்கர் என்கிற அம்சம் ஏற்கனவே வளர்ச்சிக்கு உள்ளாகி, விரைவில் பயனர்களுக்கு அனுப்பப்பட உள்ளது.

இந்த புதிய அம்சங்கள் சமீபத்திய பீட்டா அப்டேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.   யூஸர் ப்ரெண்ட்லி டபுள் ஸ்டிக்கர்ஸை பொறுத்தவரை, பயனர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்டிக்கர்களை ஒரே நேரத்தில் ஒரே சாட்டில் அனுப்ப முடியும் திறனை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சாத்தியமாகும் பட்சத்தில் சாட் ஸ்க்ரீன் ஸ்பேஸ் ஆனது தானாகவே சுருங்கும், அது இன்னும் யூஸர் ப்ரெண்ட்லியாக இருக்கும்.

கூறப்படும் இரண்டாவது ஸ்டிக்கர் அம்சமானது – லோகேஷன் ஸ்டிக்கர் ஆகும். இந்த ஸ்டிக்கர் அம்சம் ஆனது இரண்டு வகையான தீம்களில் வெளியாகும். அதாவது புகைப்படங்கள் மற்றும் GIF-களைப் போன்ற மீடியாக்களை கொண்டு லோகோஷன் ஸ்டிக்கர்களை உருவாக்கும். வாட்ஸ்ஆப்பில் ஏற்கனவே இருக்கும், லோகேஷன் ஷேரிங் அம்சத்தின் சுவாரசியத்தை இது அதிகமாகும் என்று எதிர்பார்க்கலாம். “டிஸ்மிஸ் அஸ் அட்மின்.! மூன்றாவது புதிய அம்சமான “டிஸ்மிஸ் அஸ் அட்மின்” பற்றி பேசுகையில், வாட்ஸ்ஆப்பின் ஐஓஎஸ் 2.18.41 வெர்ஷன் மற்றும் ஆண்ட்ராய்டின் 2.18.116 வெர்ஷனில் இந்த புதிய அம்சம் காணப்பட்டுள்ளது.

“டிஸ்மிஸ் அஸ் அட்மின்” என்கிற பெயரை கொண்டுள்ள அந்த அம்சமானது, ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பில் உள்ள சக அட்மினை டிஸ்மிஸ் செய்யும் உரிமையை பிற அட்மினுக்கு வழங்கும்.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதமே, இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக பரிசோதிக்கப்படும் என்று என்று கூறப்பட்டு இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. வெறுமனே டாப் செய்தால் போதும். இந்த அம்சத்தின் பிரதான நோக்கமே – சக அட்மின்களை நீக்குவதற்கான வழிமுறையை எளிமை ஆக்குவதே ஆகும். நேற்றுவரை ஒரு மெம்பரை, அட்மின் பதவியை நீக்க வேண்டும் எனில், அவரை க்ரூப்பை விட்டு ரிமூவ் செய்து பின்னர் மீண்டும் ஆட் செய்ய வேண்டியதாக இருக்கும். இனி அந்த நீளமான செயலமுறைக்கு அவசியம் இருக்காது. வெறுமனே “டிஸ்மிஸ் அஸ் அட்மின்” அம்சத்தினை டாப் செய்தால் போதும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்