எச்சரிக்கை..! செட்-டாப் பாக்ஸ்ல் சிப் வைத்து கண்காணிப்பு ..!
தற்சமயம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது, அதன்படி தொலைக்காட்சி செட்-டாப் பாக்ஸ் சேவையில் புதிய சிப் ஒன்றை நிறுவுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஸ்மிருதி இரானி தலைமையிலான தகவல் மற்றும் ஓளிபரப்பு அமைச்சகம் சார்பில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி செட்-டாப் பாக்ஸ் சேவையில் புதிய சிப் திட்டம் பொறுத்தவரை, ஒவ்வொரு சேனல் அலைவரிசைக்கும் அதிக நம்பகமான பார்வையாளர்களின் புள்ளிவிவரங்களைப் பெறுவதற்கு என்று தகவல் மற்றும் ஓளிபரப்பு அமைச்சகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் பல்வேறு சேனல்களை கண்டறிந்து அவற்றின் கால அளவை எளிமையாக கணக்கிடலாம் எனவும் டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் செட்-டாப் பாக்ஸில் சிப் ஒன்றை கண்டறிந்து நிறுவுமாறு டி.டி.டீ ஆபரேட்டர்பகளில் பரிந்துரைத்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த சிப் முறை பயன்பாட்டுக்கு வந்தால் பல்வேறு சேனல்களை கண்டறிந்து, அவற்றின் கால அளவை மிக எளிமையாக கணக்கிட முடியும் என்று டிராய் அமைப்பு கூறியுள்ளது. மேலும் அரசின் சேனல் தூர்தர்ஷன் அலைவரிசையின் பார்வையாளர் தற்சமயம் குறைவாக இருப்பதாக அறிவிவித்துள்ளது டிராய் அமைப்பு. எனவே இந்த புதிய திட்டம் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் ஒளிபரப்பு பார்வையாளர் ஆய்வு கவுன்சில் (BARC) இந்தியா-ன் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பார்வையாளர்களின் புள்ளிவிவரங்கள் பெருவதற்கு இந்த சிப் முறை கொண்டுவரப்படுகிறது, அதன்பின்பு இந்த முறை பழைய முறை போன்றது தான் என டிராய் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செட்-டாப் பாக்ஸ் சேவையில் புதிய சிப் மூலம் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களுக்கு அதிக வெளிப்படைத்தன்மையையும் துல்லியத்தையும் கொண்டுவரும் என்று டிராய் கருதுகிறது. அதன்பின்பு டி.ஆர்.டபள்யு ஆபரேட்டர்களை புதிய செட்-டாப் பாக்ஸில் ஒரு சிப் நிறுவுவது கடினமான வேலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.