ட்விட்டர் அதன் ட்விட்டர் ப்ளூவிற்கான (Twiter Blue) சந்தா சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது
உலக பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க்கின் ட்விட்டர் நிறுவனம், அதன் ட்விட்டர் ப்ளூ சேவைக்கான மாதாந்திர மற்றும் வருடாந்திர சந்தா சேவையை இந்தியாவில் அறிமுகபடுத்தியுள்ளது.
ட்விட்டர் ப்ளூ (Twiter Blue) என்றால் என்ன..?
ட்விட்டர் ப்ளூ என்பது பயனர்களின் கணக்கில் நீல நிறச் (blue checkmark) செக்மார்க் அடையாளத்தை வழங்குகிறது மற்றும் ட்விட்டர் ப்ளூ அம்சங்களுக்கான ஆரம்ப அணுகல்களான ட்வீட்டை எடிட் செய்தல், ட்வீட்டை செயல்தவிர்த்தல், நீண்ட மற்றும் உயர்தர வீடியோக்களை இடுகையிடும் திறன் போன்ற பல சலுகைகளை வழங்குகிறது. ட்விட்டர் புளூ சேவையை மேம்படுத்துவதால் அதில் சேர்க்கப்பட்டுள்ள அம்சங்கள் எந்த நேரத்திலும் மாற்றப்படலாம்.
ட்விட்டர் ப்ளூவில் சேர்வது எப்படி.?
ட்விட்டரின் இணையதளத்தில், இடது புறம் உள்ள மெனுவில் ‘ட்விட்டர் ப்ளூ’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாப்-அப்பில் உங்களுக்கு விருப்பமான திட்டத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். பின்னர் அந்த திட்டத்திற்கான கட்டணத்தை செலுத்தியதும் இணையதளத்தில் இந்த சேவையை அணுக முடியும்.
Android மற்றும் iOS இல், ட்விட்டரின் மெனுவில் ‘ட்விட்டர் ப்ளூ’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாப்-அப்பில் வரும் திட்டத்தை தேர்வு செய்து கட்டணம் செலுத்தியதும் மொபைல் போனில் இந்த சேவையை அணுக முடியும். மொபைல் போனில் தற்பொழுது மாதாந்திர ட்விட்டர் பிரீமியம் சேவையை மட்டுமே அணுக முடியும்.
ட்விட்டர் ப்ளூ சேவை கட்டண விவரம் :
ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் (iOS) மொபைல் போன் மூலம் ட்விட்டர் ப்ளுவில் இணையும் பயனர்கள் மாதக் கட்டணமாக ரூ.900 செலுத்த வேண்டும். மொபைல் பயனர்களை விட இணைய பயனர்களுக்கு கட்டணம் குறைவாக உள்ளது.
ட்விட்டர் ப்ளூவை இணையதளம் வழியாக அணுகுபவர்களுக்கு மாதாந்திர கட்டணமாக ரூ.650 செலுத்தவேண்டும். இதில் வருடத்திற்கு மாதாந்திர கட்டணம் ரூ.7,800 செலவாகும். வருடாந்திர சந்தாவை பெற வருடத்திற்கு ரூ.6800 அல்லது மாதத்திற்கு ரூ.566 செலவாகும். கடந்த 30 நாட்களுக்கும் மேலாக உங்கள் கணக்கு செயலிழந்திருந்தால், Twitter Blue சந்தாவை உங்களால் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…