இப்போது இருக்கும் காலகட்டத்தில் நாம் அனைவரும் ரூ.20,000 பட்ஜெட்டிற்குள் நல்ல தரமான 5G ஸ்மார்ட்போன்களை வாங்குவதில் ஆர்வம் கட்டுவது உண்டு. இந்த நிலையில் ரூ.20,000 பட்ஜெட் மற்றும் அதற்கு கீழே உள்ள விலையில் வெளிவந்த நல்ல அம்சங்களை கொண்ட டாப் 5 தரமான போன்களை பற்றி பார்க்கலாம்.
OnePlus Nord CE 3 Lite 5G :
OnePlus Nord CE 3 Lite 5G போன் ஆனது 120Hz ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate) 6.7-இன்ச் LCD டிஸ்ப்ளேயும் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (Qualcomm Snapdragon 695) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. பின்புற கேமரா 108 MP-யை கொண்டுள்ளது.
இது தவிர, இந்த போன் 8 ஜிபி ரேம் (RAM) மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் (InteralMemory) வசதியைக் கொண்டுள்ளது. மேலும், இந்த போன் 5000 mAh பேட்டரி வசதியுடனும், 67W சூப்பர்வூக் சார்ஜிங் ஆதரவுடன் உள்ளது. இதன் விலை ரூ.19,999 இருக்கும். எனவே, 20,000 பட்ஜெட்டில் ஒரு நல்ல போன் வாங்கவேண்டும் என்றால் இதனை வாங்கிக்கொள்ளலாம்.
Oppo A78 5G :
ஓப்போ (Oppo ) நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய சூப்பர் போன் Oppo A78 5G. இந்த போனானது 50MP + 2MP பின்புற கேமராவையும் (Rear Camera) , 8MP முன் கேமரவையும் (Front Camera) கொண்டுள்ளது. மேலும், இந்த போன் ஆனது 6.5 இன்ச் டிஸ்பிளேவைவும், 90Hz ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate) கொண்டுள்ளது.
இதனை தவிர 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை வசதி உள்ளது. இதுனுடைய விலை இந்தியாவில் ரூ. 18,999 இருக்கும் என கூறப்படுகிறது. நீங்கள் ஒரு Oppo பிரியர்கள் என்றால் கண்டிப்பாக இந்த போன் உங்களுக்கு பிடிக்கலாம்.
Samsung Galaxy M33 5G :
Samsung Galaxy M33 5G ஃபோனில் சிறப்பான அம்சம் எதுவென்றால், இந்த போன் 6000m-Ah இன் வலுவான பேட்டரியை கொண்டுள்ளது. எனவே, இது சாதாரண பயன்பாட்டில் 2 நாட்களுக்கு நீடிக்கும். மேலும், இந்த போன் 8 ஜிபி ரேம் மற்றும் இன்னும் 8 ஜிபி வரை விரிவாக்கம் செய்துகொள்ளும் வசதி உள்ளது.
இது தவிர, முன்புற கேமரா 50MP (F1.8)+ 5MP (F2.2/UW- 123 FOV) + 2MP (F2.4/Depth) + 2MP (F2.4/Macro) QuadCamera -வையும், 8 MP முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. இந்த போனின் விலை ரூ. 16,999. இந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு அசத்தலான போனை விருப்பம் உள்ளவர்கள் வாங்கலாம்.
Redmi Note 12 5G :
Redmi Note 12 போனானது 6.7-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அதைப்போல, 120HZ ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate) கொண்டுள்ளது. 8MP அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ கேமராவுடன் 48MP AI டிரிபிள் கேமரா அமைப்புயும் 13MP முன் கேமராவையும் கொண்டுள்ளது.
மேலும், இந்த போன் ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனுடைய விலை ரூ. 18,999 இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, நீங்கள் ஒரு Redmi பிரியர்கள் என்றால், கண்டிப்பாக இந்த போன் உங்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.
Realme Narzo 50
Realme Narzo 50 போன் ஆனது கேமிங் பிரியர்களுக்கு நல்ல போனாக இருக்கும். ஏனெனில் இது MediaTek Helio G96 செயலியில் இயங்குகிறது. 6.6 இன்ச் FHD டிஸ்பிளேவுடன் 120Hz ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate) கொண்டுள்ளது. பின்புற கேமரா 50MP + 2MP + 2MP -யை கொண்டுள்ளது. முன்புற கேமரா 16MP-யை கொண்டுள்ளது.
33W டார்ட் சார்ஜிங் (Dart charger ) ஆதரவுடன் 5,000mAh மாசிவ் பேட்டரி வசதியை கொண்டுள்ளது. மேலும், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் (InteralMemory) வசதியைக் கொண்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.15,500 இருக்கும். மேற்கண்ட இந்த 5 போன்களுக்கும் 20,000 மற்றும் அதற்குள் பட்ஜெட்டில் இருக்கும் தரமான போன்கள். எனவே, இதில் எந்த போன் உங்களுக்கு பிடித்துள்ளதோ அதனை வாங்கிக்கொள்ளுங்கள்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…