வோடஃபோன் நெட்வொர்க்கில் பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என அறிவித்தது வோடஃபோன் நிறுவனம்…!!

Default Image

சில வாரங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் ஏர்செல் நெட்வொர்க்கில் பிரச்னை ஏற்பட்டது. கடைசியில், திவால் நோட்டீசை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஏர்செல்.

அதன்பிறகு நேற்று (வியாழக்கிழமை) ஏர்டெல் நெட்வொர்க்கில் பிரச்னை ஏற்பட்டது. பலருக்கு அழைப்புகள் செல்லவில்லை. ஏர்டெல்லுக்கு எதிராக சோஷியல்மீடியாவில் அனல் பறக்கும் கருத்துக்கள் பகிரப்பட்டன.இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டது ஏர்டெல்.

இந்நிலையில் இன்று வோடஃபோன் நெட்வொர்க்கில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பரவலாக உள்ள நகர்புறம்,புறநகர் உள்ளிட்ட பல இடங்களில் சிக்னல் கிடைக்கவில்லை. சிலருக்கு சிக்னல் இருந்தும் அழைப்புக்கள் செல்லவும் இல்லை… வரவும் இல்லை. விசாரித்ததில் தொழில்நுட்பக் கோளாறு (ஹோம் லொக்கேஷன் ரிஜிஸ்டர் பிரச்னை என்கின்றனர்) காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது… சரியாகிவிடும் என்றனர்.

இது தொடர்பாக வோடோஃபோன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இது தற்காலிகமானதுதான்… விரைவில் பிரச்னை சரி செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்