வோடபோன் சிக்னல் கிடைப்பதில் ஏர்செல், ஏர்டெலை தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்சியடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே ஏர்செல் வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வந்தனர். பல இடங்களில் ஏர்செல் சேவை முற்றிலும் முடங்கியதால் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர். இதனையடுத்து ஏர்செல் நிறுவனமே வாடிக்கையாளர்களை வேறு நெட்வொர்கிற்கு மாறி கொள்ளும்படி அறிவுரை வழங்கியது.
இதனிடையே நேற்று பல்வேறு இடங்களில் ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல் சேவையும் சிக்னல் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர். இண்டர்நெட் கிடைக்கிறது என்றும் கால் செய்ய முடியவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
மேலும் முதலில் இப்பிரச்னை வடஇந்திய ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இருந்த நிலையில் தற்போது தென்னிந்தியாவிலும் நேற்று தொடர்ந்தது. மேலும் 4ஜி சிம்மில் 2ஜி சேவை தான் கிடைக்கிறது என்று இணையவாசிகள் கொந்தளித்து வந்தனர்.
இதனிடையே புகாருக்கு விளக்கம் கொடுத்த ஏர்டெல், மன்னிப்பு கேட்டது. சென்னையில் சில பகுதிகளில் பாதிக்கப்பட்டிருந்த ஏர்டெல் சேவை முழுமையாக சீரானது. சிக்னல் கிடைப்பதில் பிரச்னை என்றால் செல்போனை ரீஸ்டார்ட் செய்யவும் என தெரிவித்திருந்தது.
ஏர்செல், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது வோடபோனிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இன்று பல இடங்களில் வோடபோன் சிம்மிலிருந்து மற்றவர்களுக்கு தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்நிலையில் இதற்கு டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ள வோடபோன் இந்தியா, இது ஒரு தாற்காலிகமான பிரச்னை. நாங்கள் அதனை சரிசெய்து கொண்டிருக்கிறோம். பிரச்னை சரியான பின்பு உங்களால் சிரமமின்றி மற்றவர்களுக்கு தொடர்பு கெள்ள முடியும் என விளக்கம் கொடுத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…