கடந்த சில மாதங்களாக விவோ நிறுவனம் அதன் ஒய் சீரிஸில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடைசியாக விவோ ஒய்100ஐ 5ஜி (Vivo Y100i 5G) ஸ்மார்ட்போனை சீனாவில் ரூ.30,000க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்தது. இப்போது, விவோ ஒய்36ஐ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, 4 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி போன்றவற்றுடன் கூடிய விவோ ஒய்36ஐ (Vivo Y36i) ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இது கடந்த மே மாதம் அறிமுகமான விவோ ஒய்36 போனின் அதே அம்சங்களைக் கொண்டுள்ளது.
இதில் 1600×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.56 இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 60 ஹெர்ட்ஸ் முதல் 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. 180 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட்டுடன் 840 நிட்ஸ் பீக் பிரைட்னெஸ் உள்ளது. இது 16.7 மில்லியன் நிறங்களை ஒருங்கிணைத்துக் காட்டக்கூடியது. பாதுகாப்பிற்க்காக சைடு மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட் மற்றும் பேஸ் அன்லாக் வசதி உள்ளது.
மாலி-ஜி57 எம்பி2 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் விவோ ஒய்36ஐ போனில் பொருத்தப்பட்டுள்ளது. இது 30 சதவீதம் அதிக செயல்திறனை வழங்குகிறது. இது நீண்ட நேர கேம்ப்ளே, வேகமான நெட்வொர்க், கேமராவில் ஏஐ அம்சங்கள் போன்றவற்றில் சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது.
ஆண்ட்ராய்டு 13.0-ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆரிஜின் ஓஎஸ் 3 உள்ளது. ஆக்சிலரோமீட்டர், அம்பியண்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், எலெக்ட்ரானிக் காம்பஸ் போன்ற சென்சார்கள் உள்ளன.
கேமராவைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆன்டி-ஸ்ட்ரோபோஸ்கோபிக் சென்சார் அடங்கும். முன்புறத்தில் வாட்டர் ட்ராப் நாட்சுடன் கூடிய 5 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.
இதனால் 720 பிக்சல் முதல் 1080 பிக்சல் தெளிவுடன் கூடிய வீடியோவைப் பதிவு செய்ய முடியும். நைட் சீன், போர்ட்ரெய்ட், மைக்ரோ மூவி, பனோரமா, ஸ்லோ மோஷன், டைம் லேப்ஸ் போட்டோகிராபி போன்ற கேமரா அம்சங்கள் உள்ளன.
186 கிராம் எடை மற்றும் 8.09மிமீ தடிமன் கொண்ட இந்த போனில் 5000mAh லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. குறிப்பாக இதில் ரெவெர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதோடு 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், 5ஜிம் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் போன்ற அம்சங்களும் உள்ளன.
விவோ ஒய்36ஐ ஆனது பேண்டஸி பர்பில், கேலக்ஸி கோல்ட், டீப் ஸ்பேஸ் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் கூடிய வேரியண்ட் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. இந்த வேரியண்ட் RMB 1,199 (ரூ.14,000) என்ற விலையில் விற்பனைக்கு உள்ளது. இந்த விவோ ஒய்36ஐ போன் வரும் நாட்களில் வேறு பெயரில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…