தொழில்நுட்பம்

Vivo Y200 5G: இந்தியாவில் களமிறங்குகிறது விவோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்.! எப்போது தெரியுமா.?

Published by
செந்தில்குமார்

விவோ நிறுவனம் அதன் விவோ Y100 (Vivo Y100) என்ற ஸ்மார்ட்போனை கடந்த பிப்ரவரி 16ம் தேதி அறிமுகப்படுத்தியது. அதே வரிசையில் தற்போது புதிய விவோ Y200 5ஜி (Vivo Y200 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது. கடந்த அக்-9ம் தேதி இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் குறித்த டீசர் ஒன்றை விவோ வெளியிட்டது.

அப்போது ஸ்மார்ட்போனின் சரியான அறிமுக தேதி தெரியவில்லை. ஆனால், தற்போது Y200 5ஜி ஆனது அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 23ம் தேதி விவோ Y200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகம் செய்யப்படவுள்ளது.

டிஸ்பிளே

இந்த விவோ Y200 ஸ்மார்ட்போன் ஆனது 2,400 x 1,080 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.67 இன்ச் எஃப்எச்டி+ அமோலெட் டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அறிமுகமான விவோ Y100 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் அளவுடைய டிஸ்பிளே உள்ளது. இதில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கலாம்.

பிராசஸர்

விவோ Y200 ஸ்மார்ட்போனில் அட்ரினோ 619 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் பொருத்தபடலாம். இதே பிராசஸர் ரெட்மி நோட் 12 5ஜி மற்றும் ஐக்யூ Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனிலும் உள்ளது.

இது ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 13 மூலம் இயக்கப்படுகிறது. இந்த மொபைல் ஒரு 5ஜி மொபைல் ஆகும். இதற்கு முந்தைய மாடலான விவோ Y100 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட் உள்ளது.

கேமரா

இதில் பின்புறத்தில் ஆரா லைட்டுடன் கூடிய ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) அம்சம் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா கொண்ட டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக  16 எம்பி கேமரா பொருத்தப்படலாம். இதில் டிஜிட்டல் ஜூம், ஆட்டோ ஃப்ளாஷ், ஃபேஸ் ஃபேஸ்டெக்ஷன் போன்ற புகைப்பட அம்சங்கள் இருக்கலாம்.

பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்

190 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 4800 mAh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்படலாம். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதன் ஆரம்ப மாடல் ஆனது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம்.

விலை

டெசர்ட் கோல்ட் மற்றும் ஜங்கிள் கிரீன் நிறங்களில் இந்த போன் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. விவோ ஒய் 100 ஆனது ரூ.21,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, விவோ Y200 ஸ்மார்ட்போனும் ரூ.24,000 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஐஸ்கிரீம், குக்கீஸ் தயாரிப்பதா ஸ்டார்ட்அப் பிசினெஸ்? மத்திய அமைச்சர் கடும் தாக்கு!

டெல்லி : நேற்று (ஏப்ரல் 3) டெல்லியில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா 2025 நிகழ்வு நடைபெற்றது. இதில், மத்திய…

24 minutes ago

இனி யாரும் நெருங்க முடியாது! விஜய்க்கு ”Y” பிரிவு பாதுகாப்பு அமல்..!

சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…

2 hours ago

சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல தயாராகும் இரண்டாவது இந்தியர்.! யார் இந்த சுபான்ஷு சுக்லா?

டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…

2 hours ago

“பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை!” அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

கோவை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் அவ்வப்போது…

2 hours ago

இந்த வாழ்க்க இருக்கே… யப்பா தூக்கி வீசுது நம்மள – விக்ரம்!

சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…

4 hours ago

‘பகலில் ஒரு இரவு’ புகழ் நடிகர் ரவிக்குமார் காலமானார்.!

சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…

4 hours ago