தொழில்நுட்பம்

Vivo Y200 5G: 5G ஆதரவுடன் புதிய வருகையை அறிவித்த விவோ.! விரைவில் இந்தியாவில் வெளியீடு.!

Published by
செந்தில்குமார்

கடந்த பிப்ரவரி 16ம் தேதி விவோ நிறுவனம் அதன் புதிய விவோ Y100 (Vivo Y100) என்ற ஸ்மார்ட்போனில் அறிமுகப்படுத்தியது. அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த விவோ நிறுவனம் தயாராக வருகிறது.

அதன்படி புதிய விவோ Y200 (Vivo Y200) என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்போவதாக டீசர் ஒன்றை வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சரியான அறிமுக தேதி தெரியவில்லை என்றாலும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிஸ்பிளே

விவோ Y200 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் அளவுடைய எஃப்எச்டி+ அமோலெட் டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அறிமுகமான விவோ Y100 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் அளவுடைய டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதில் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 1600 நீட்ஸ் வரையிலான பிரைட்னஸ் இருக்கலாம்.

பிராசஸர்

அட்ரினோ 619 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் ஆனது விவோ ஒய் 200 ஸ்மார்ட்போனில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பிராசஸர் ஆனது ரெட்மி நோட் 12 5ஜி மற்றும் ஐக்யூ Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனிலும் உள்ளது.

இது ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 13 மூலம் இயக்கப்படுகிறது. இந்த மொபைல் ஒரு 5ஜி மொபைல் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. விவோ ஒய் 100 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடுகையில் மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட் உடன் வருகிறது.

கேமரா

விவோ Y200 ஸ்மார்ட்போனில் விவோ ஒய் 100 இல் இருப்பதுபோலவே, பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் லைட்டுடன் கூடிய ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) அம்சம் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா கொண்ட டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக  16 எம்பி கேமரா பொருத்தப்படலாம். இதில் டிஜிட்டல் ஜூம், ஆட்டோ ஃப்ளாஷ், ஃபேஸ் ஃபேஸ்டெக்ஷன் போன்ற புகைப்பட அம்சங்கள் இருக்கலாம்.

பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்

190 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 4800 mAh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

இதன் ஆரம்ப மாடல் ஆனது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம். விவோ ஒய் 100 ஆனது ரூ.21,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, விவோ Y200 ஸ்மார்ட்போனும் ரூ.25,000 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…

7 hours ago

இது அவுட் இல்ல.., மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இஷான் கிஷான் ‘சர்ச்சை’ அவுட்!

ஹைதராபாத் :  இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…

9 hours ago

SRH vs MI : ஒற்றை ஆளாய் மும்பையை எதிர்த்த SRH வீரர் கிளாசென்! வெற்றிக்கு 144 ரன்கள் டார்கெட்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

9 hours ago

பாகிஸ்தானுடன் இனி எந்த உறவும் இல்லை? இந்தியா எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த…

10 hours ago

SRH vs MI : வெற்றிப்பாதையை தொடருமா மும்பை? பேட்டிங் களத்திற்கு தயாரான ஹைதராபாத்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

11 hours ago

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

12 hours ago