Vivo Y200 5G: 64எம்பி கேமரா..5000 mAh பேட்டரி.! அசத்தல் அம்சங்களுடன் விவோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்.!

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ, ஒய் சீரிஸில் புதிய விவோ ஒய்200 5ஜி (Vivo Y200 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, அக்டோபர் 23ம் தேதி விவோ Y200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு முன்னதாக விவோ ஒய்100 (Vivo Y100) என்ற ஸ்மார்ட்போனை கடந்த பிப்ரவரி 16ம் தேதி அறிமுகப்படுத்தியது.
அதைத்தொடர்ந்து இந்த விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது. இதுவரை இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படமால் இருந்தது. ஆனால் இப்போது ஈ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட்டில் இதன் அம்சங்கள் மற்றும் டிஸ்பிளே, கேமரா போன்றவற்றின் விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளது.
8 ஜிபி ரேம், 64எம்பி கேமரா.,! மிட்ரேஞ்சில் அறிமுகமாகும் விவோவின் புதிய மாடல்.!
டிஸ்பிளே
விவோ ஒய்200 5ஜி ஆனது 1080×2400 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 90 முதல் 120 வரையிலான ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.67 இன்ச் (16.94 செ.மீ) எஃப்எச்டி+ அமோலெட் டிஸ்பிளேக் (Full HD+ AMOLED Display) கொண்டுள்ளது. அதோடு 180 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் உள்ளது.
ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், அக்சிலரோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், கைரோஸ்கோப், அம்பியன்ட் லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ் போன்ற சென்சார்கள் உள்ளன. இதற்கு முன்னதாக அறிமுகமான விவோ ஒய்100 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் அளவுடைய டிஸ்பிளே உள்ளது.
பிராசஸர்
மாலி-ஜி68 எம்சி4 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 ஆக்டா கோர் பிராசஸர் ஆனது விவோ ஒய்200 5ஜியில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஒரு 5ஜி மொபைல் ஆகும். இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு ஃபன்டச் ஓஎஸ் 13 மூலம் இயக்கப்படுகிறது.
இதே ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் ரெட்மி நோட் 12 5ஜி மற்றும் ஐக்யூ Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனிலும் உள்ளது. இதற்கு முந்தைய மாடலான விவோ ஒய்100 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட் உள்ளது.
Big Dussehra Sale: 40% முதல் 90% வரை தள்ளுபடி அறிவித்த பிளிப்கார்ட்.! தசரா திருவிழாவே களைகட்டப்போகுது..!
கேமரா
இதில் இருக்கும் கேமராவைப் பொறுத்தவரையில் பின்புறம் ஆரா லைட்டுடன் கூடிய டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) அம்சம் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா அடங்கும். செல்ஃபிக்காக 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதில் 64 எம்.பி. மோட், லைவ் ஃபோட்டோ, டைம் லேப்ஸ், ப்ரோ, பானோ, போர்ட்ரெய்ட், ஸ்லோ மோஷன், வீடியோ, விளாக் மூவி, டூயல் வியூ, டபுள் எக்ஸ்போஷர் போன்ற கேமரா அம்சங்கள் உள்ளன.
பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்
181 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் 19 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும்.
இதன் ஆரம்ப மாடல் ஆனது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. அதோடு 3 ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் மற்றும் மெமரி கார்டு மூலம் 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் எக்ஸ்பென்டபிள் வசதி உள்ளது.
Honor Play 8T: 12 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா.! ஹானரின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்..!
விலை மற்றும் சலுகை
டெசர்ட் கோல்ட் மற்றும் டெசர்ட் கிரீன் நிறங்களில் அறிமுகப்படுத்தப்படும் விவோ ஒய்200, 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் என்ற வேரியண்ட்டில் கிடைக்கும். விவோ ஒய் 100 ஆனது ரூ.21,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, விவோ ஒய் 200 ஸ்மார்ட்போனும் ரூ.21,999 என்ற விலையிலேயே விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிடத்தக்க பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.2,500 வரை தள்ளுபடி வழங்கப்படும். மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ, போகோ எஃப்5 மற்றும் இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக விவோ ஒய்200 ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025