வெறும் ரூ.8,499 பட்ஜெட்.. 8 ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.! அறிமுகமானது போகோ சி65.!

Published by
செந்தில்குமார்

போகோ (POCO) நிறுவனம் அதன் சி-சீரிஸில் போகோ சி65 (POCO C65) என்கிற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போகோ சி65  ஆனது நிறுவனத்தின் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும்  600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட 6.74 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

எல்இடி ஃபிளாஷுடன் டிரிபிள் ரியர் கேமரா சென்சார்கள் உள்ளன. 8 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. மேலும், இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ், சைடு மௌண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

16ஜிபி ரேம்..50எம்பி கேமரா..5,000mAh பேட்டரி.! உலக அளவில் அறிமுகமானது விவோ X100, X100 Pro.!

இந்த ஸ்மார்ட்போன் மேட் பிளாக், பேஸ்டல் ப்ளூ ஆகிய நிறங்களில் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது. இதன் முதல் விற்பனைக்கு டிசம்பர் 18 ஆம் தேதி மதியம் 12 மணிக்குத் தொடங்கவுள்ளது. புதிய போகோ போனை ஐசிஐசிஐ கார்டு மூலம் பணம் செலுத்தி வாஙகினால் ரூ.1,000 உடனடி தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது.

போகோ சி65 அம்சங்கள்

அம்சங்கள் போகோ சி65
டிஸ்பிளே 6.74 இன்ச் எச்டி+, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 600 Nits பிரைட்னஸ்
பிராசஸர் மீடியாடெக் ஹீலியோ ஜி 85
ஓஎஸ் ஆண்ட்ராய்டு 13, எம்ஐயுஐ 14
கேமரா 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா
செல்ஃபி 8 எம்பி
பேட்டரி 5000mAh
சார்ஜிங் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
ரேம் + ஸ்டோரேஜ் 4 ஜிபி + 128 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி, 8 ஜிபி + 256 ஜிபி
மற்ற அம்சங்கள் டூயல் சிம் கார்டு ஸ்லாட், 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக்
பாதுகாப்பு சைடு மௌண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக்

விலை

வேரியண்ட்  விலை
4 ஜிபி + 128 ஜிபி ரூ.8,499
6 ஜிபி + 128 ஜிபி ரூ.9,499
8 ஜிபி + 256 ஜிபி ரூ 10,999

Published by
செந்தில்குமார்

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

6 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

10 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

10 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

10 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

11 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

11 hours ago