16ஜிபி ரேம்..50எம்பி கேமரா..5,000mAh பேட்டரி.! உலக அளவில் அறிமுகமானது விவோ X100, X100 Pro.!

Vivo X100 Pro

விவோ (Vivo) நிறுவனம் அதன் எக்ஸ்100 சீரிஸ்  (X100 Series) ஸ்மார்ட்போன்களை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸில் விவோ எக்ஸ்100 (Vivo X100) மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) என மாடல்கள் உள்ளன. இதில் தனித்துவமான விவோ வி3 சிப் 1 ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9300 என்கிற ஃபிளாக்ஷிப் சிப்செட்டுடன் இணைக்கப்ட்டுள்ளது.

இதனுடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.78 இன்ச் எல்டிபிஓ கர்வ்டு அமோலெட் டிஸ்பிளே உள்ளது. பின்புறத்தில் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி வைட்-ஆங்கிள் + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 100 வாட்ஸ் அல்ட்ரா பாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் வசதியுடன் 5400mAh பேட்டரி இக்கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அம்சங்கள் கொண்ட எக்ஸ்100 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உலகளவில் வெளியாகியிருந்தாலும், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. எனவே, விவோ எக்ஸ்100 சீரிஸ் இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்சங்கள்எக்ஸ்100 எக்ஸ்100 ப்ரோ
டிஸ்பிளே6.78 இன்ச், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 nits பிரைட்னஸ்6.78 இன்ச், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 nits பிரைட்னஸ்
பிராசஸர்மீடியாடெக் டைமன்சிட்டி 9300மீடியாடெக் டைமன்சிட்டி 9300
ஓஎஸ்ஆண்ட்ராய்டு 14, ஃபன்டச் ஓஎஸ் 14ஆண்ட்ராய்டு 14, ஃபன்டச் ஓஎஸ் 14
கேமரா 50எம்பி மெயின் கேமரா + 64 எம்பி ஜெய்ஸ் சூப்பர் டெலிஃபோட்டோ + 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள்50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி ஜெய்ஸ் சூப்பர் டெலிஃபோட்டோ + 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள்
செல்ஃபி கேமரா32 எம்பி32 எம்பி
பேட்டரி5,000mAh பேட்டரி5,400mAh பேட்டரி
சார்ஜிங்120W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்100W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
ரேம் & ஸ்டோரேஜ்12 ஜிபி +256 ஜிபி, 16 ஜிபி +256 ஜிபி, 16 ஜிபி +512 ஜிபி, 16 ஜிபி + 1 டிபி12 ஜிபி +256 ஜிபி, 16 ஜிபி +256 ஜிபி, 16 ஜிபி +512 ஜிபி, 16 ஜிபி + 1 டிபி
மற்ற அம்சங்கள்இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐஆர் பிளாஸ்டர் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், IP68 ரேட்டிங், 5ஜி, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 7, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐஆர் பிளாஸ்டர் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், IP68 ரேட்டிங், 5ஜி, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 7, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்

விலை
வேரியண்ட்   எக்ஸ்100 சீன விலைஎக்ஸ்100 ப்ரோ சீன விலை
12 ஜிபி +256 ஜிபி3,999 யுவான் (ரூ.46,823)4999 யுவான் (ரூ.59,678)
16 ஜிபி +256 ஜிபி4299 யுவான் (ரூ.51,324)5299 யுவான் (ரூ.63,259)
16 ஜிபி +512 ஜிபி4599 யுவான் (ரூ.54,902)5,499 யுவான் (ரூ.65,642)
16 ஜிபி + 1 டிபி4999 யுவான் (ரூ.59,678)5,999 யுவான் (ரூ.70,223)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்