அட்ராசக்க! 5,500Mah பேட்டரி..50MP கேமரா..அசத்தல் அம்சங்களுடன் வருகிறது vivo V30e 5G!

Published by
பால முருகன்

Vivo V30e  : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e 5G ) ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போனில் என்னென்ன சிறப்பான அம்சங்கள் எல்லாம் இருக்கிறது? எந்த தேதியில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது என்பதனை விவரமாக பார்க்கலாம்.

சிறப்பு அம்சங்கள் (Vivo V30e 5g Specifications)

  • இந்த போன் வி30இ 5ஜி (vivo V30e 5G ) ஆனது ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) 6.78-இன்ச் டிஸ்பிளேயை கொண்டுள்ளது. எனவே, அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொண்டு விவோ மடலில் போன் தேடுபவர்களுக்கு இந்த போன் கண்டிப்பாக பிடிக்கலாம்.
  • இந்த போன் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரல் 1 SoC (Snapdragon 6 Gen 1 SoC ) வெர்ஷன் மூலம் இயங்குகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி மற்றும் 8ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியை கொண்டு இரண்டு மாடல்களில் வருகிறது.  ரேம் 8 ஜிபி மற்றும் Snapdragon 6 Gen 1 SoC  வெர்ஷன் இருப்பதால் கண்டிப்பாக கேம் விளையாடுபவர்களுக்கு இந்த போன் பயன் உள்ளதாக இருக்கும்.
  • கேமராவை பொறுத்தவரையில், 50எம்பி (Sony IMX882 sensor) சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் மற்றும் 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா வசதியை கொண்டு இருக்கிறது.  செல்ஃபிக்காக ஆட்டோ ஃபோகஸ் லென்ஸுடன் 50MP கேமராவும் இருக்கிறது.
  • பேட்டரி வசதியை பொறுத்தவரையில், 5,500எம்ஏஎச் பேட்டரி வசதியை கொண்டுள்ளது. 44 வார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங்க்கும் வருகிறது.
  • இந்த போன் ஆனது வெல்வெட் ரெட் மற்றும் சில்க் ப்ளூ நிறங்களில் அறிமுகம் ஆக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

விலை எவ்வளவு?

வி30இ 5ஜி (vivo V30e 5G ) போனின் விலையை பற்றி பார்க்கையில் 30,000க்கு இந்தியாவில் அறிமுகம் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், விலை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதற்கு முந்தைய மாடலான Vivo V29e இந்தியாவில்8 ஜிபி ரேம்/128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.26,999க்கும் 8 ஜிபி ரேம்/256 ஜிபி ஸ்டோரேஜ் வசதியை கொண்ட மாடல் ரூ.28,999க்கும் அறிமுகம் ஆனது. எனவே, வி30இ 5ஜி (vivo V30e 5G )  போன் இந்தியாவில் ரூ.30,000க்கு அறிமுகம் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எப்போது அறிமுகம்?

இப்படியான பல அட்டகாசமான அம்சங்களை கொண்டு இருக்கும் இந்த வி30இ 5ஜி (vivo V30e 5G ) போன் எப்போது அறிமுகம் ஆகும் என்று தான் சிலர் காத்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அறிமுகம் ஆகும் தேதி குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த வி30இ 5ஜி (vivo V30e 5G )  போன் ஆனது வரும் மே மாதம் 2-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்று விவோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த போன் அறிமுகம் ஆன பிறகு Flipkart மற்றும் Vivo ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு வந்துவிடும். எனவே, இந்த போனின் சிறப்பு அம்சங்கள் யாருக்கெல்லாம் பிடித்து இருக்கிறதோ அவர்கள் வாங்கிக்கொள்ளலாம்.

Published by
பால முருகன்

Recent Posts

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

2 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

2 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

3 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

3 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

4 hours ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

4 hours ago