Vivo V29 Pro: 12 ஜிபி ரேம்..50 எம்பி கேமரா..! விவோவின் புதிய படைப்பு..இதுதான் ஆரம்பவிலை.?
விவோ நிறுவனம் கடந்த அக்டோபர் 4ம் தேதி அதன் வி29 சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த சீரிஸில் விவோ வி29 மற்றும் விவோ வி29 ப்ரோ என்ற இரண்டு மாடல்கள் உள்ளன. இதில் தற்போது ஹிமாலயன் ப்ளூ மற்றும் ஸ்பேஸ் பிளாக் என்ற இரண்டு வண்ணங்களில் விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது விற்பனைக்கு வந்துள்ளது. விவோ வி29 ஸ்மார்ட்போன் ப்ரீ-ஆர்டரில் உள்ளது.
டிஸ்ப்ளே
விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போனில் 2800 × 1260 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.78-இன்ச் அளவுள்ள எப்எச்டி+ அமோலெட் வளைந்த டிஸ்பிளே உள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வரை உள்ள வி29 ப்ரோ டிஸ்ப்ளேவில், பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது.
பிராசஸர்
இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 பிராசஸர் ஆனது பொருத்தப்பட்டுள்ளது. அதோடு ஆன்ட்ராய்டு 13 அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடிய விவோ வி29 ப்ரோவில் ஃபன்டச் ஓஎஸ் 13 உள்ளது. இந்த பிராசஸர் ஆனது 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி இணைப்பு மற்றும் புளூடூத் 5.3-ஐ கொண்டுள்ளது.
கேமரா
வி29 ப்ரோ ஸ்மார்ட்போனில் ட்ரிப்பில் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதன்படி, எல்இடி ஃபிளாஷ் லைட்டுடன் கூடிய ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 12 எம்பி போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் 8 எம்பி வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. முன்புறம் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 50 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் மைக்ரோ மூவி, ஆஸ்ட்ரோ, புரோ, பனோ, ஸ்லோ-மோ, டைம்லேப்ஸ், சூப்பர் மூன் போன்ற புகைப்பட அம்சங்கள் உள்ளன.
பேட்டரி
188 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 4600 mAh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் பேட்டரியை 18 நிமிடங்களில் 1-லிருந்து 50% வரை சார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
ஸ்டோரேஜ் மற்றும் விலை
விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. அதன்படி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகள் உள்ளன. இதில் 8 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.39,999 என்ற ஆரம்ப விலையிலும் , 12 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.42,999 என்ற ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு உள்ளது.
விற்பனை சலுகை
இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் 10 சதவீதம் வரை கேஷ்பேக் மற்றும் ரூ.4,000 கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம். மேலும், ஆன்லைனில் ஸ்மார்ட்போனை வாங்கினால் எச்டிஎஃப்சி மற்றும் எஸ்பிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்தி 3,500 ரூபாய் வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இதில் 6 மாதங்கள் வரை கட்டணமில்லா இஎம்ஐ வசதி மற்றும் 15 நாட்கள் வரையிலான ரீப்ளேஸ்மென்ட் பாலிசி உள்ளது குறிப்பிடத்தக்கது.