விவோ நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தனது சாதனைகளை உலகளவில் நிகழ்த்தி வருகிறது. இதன் வெற்றியை பல நிறுவனங்களும் வியப்பாக பார்க்கும் இந்த தருணத்தில், விவோ நிறுவனம் மீண்டும் ஒரு புதிய ரூபத்தில் வெளியாக உள்ளது. அதாவது, இது வரை இல்லாத புதுவித கேமரா வசதியை இந்த நிறுவனம் ஸ்மார்ட் போனில் புகுத்தி உள்ளது. இதனை ‘ பாப் அப் கேமரா’ என்றே அழைக்கின்றனர். மேலும் பல தகவல்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
விவோ நிறுவனம்
விவோ நிறுவனம் புதிதாக ஒரு விளம்பரத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் கருப்பு நிறத்தில் ஒரு ஸ்மார்ட் போன் புதுவித பாப் அப் கேமராவுடன் இடம் பெற்றிருக்கிறது. இதனை பார்த்த அனைவரும் இந்த வியக்கத்தக்க முயற்சியை கண்டு எப்போது வெளியாகும் என ஆவலுடன் இருக்கின்றனர்.
எப்போது உதயம்..?
இந்த புதுவித மொபைல் எப்போது வெளியாகும் என்கிற தகவலும் இதே போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. வரும் பிப்ரவரி 20 அன்று இந்த ஸ்மார்ட் போன் வெளியாகும் என அதில் தெரிவித்துள்ளனர். இது ‘விவோ வி15 ப்ரோ’ என்கிற மொபைலாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என டெக் உலகில் கிசுகிசுகின்றனர்.
விலை..?
இந்த புதுவித ஸ்மார்ட் போன் பல எதிர்பார்ப்புகளை மக்களிடையே ஏற்படுத்தும் என்றே கருதலாம். இதன் விலை ஜுலை மாதம் வெளியிட்ட விவோ வி11 மொபைலின் விலையாக கூட இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். ரூ.23,192 என்பது இதன் விலையாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
கேமரா
இந்த போஸ்டரில் 3 பின்புற கேமராக்கள் இந்த மொபைலில் உள்ளதாகவும், ஒரு பாப் அப் செல்பி கேமராவும் இதில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், கை ரேகை பதிக்க இன் டிஸ்பிளே வகை சென்சாரும் இதில் இடம் பெற்றுள்ளது.
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…