ரூ.18,000 பட்ஜெட்டில்..12ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ்.! அறிமுகமானது விவோவின் புதிய ஒய்100ஐ 5ஜி,!

VIVO Y100i 5G

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ, அதன் ஒய் சீரிஸில் புதிதாக இரண்டு ஸ்மார்ட்போன்களை அமைதியாக சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, விவோ ஒய்100ஐ 5ஜி (Vivo Y100i 5G) மற்றும் விவோ ஒய்36 (Vivo Y36) என்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது.

இதில் கடந்த மே மாதம் உலக சந்தையில் விவோ ஒய்36 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களில் வெளியானது. ஆனால் இப்போது சீனாவில் 5ஜி வேரியண்ட் மட்டுமே ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. தொடர்ந்து விவோ ஒய்100ஐ 5ஜி-ன் விலை மற்றும் ரேம், ஸ்டோரேஜ் தவிர வேறு எந்த விவரக்குறிப்புகளை விவோ வெளியிடவில்லை.

இனி வாட்ஸ்அப்பில் அன்லிமிடெட் கிடையாது.. செக் வைத்த கூகுள்..!

டிஸ்பிளே

விவோ ஒய்100ஐ 5ஜி-ல் 2388 x 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.64 இன்ச் எஃப்எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட்டைக் கொண்டுள்ளது.

விவோ ஒய்36 ஆனது 1612×720 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.56 இன்ச் எஃப்எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 60 ஹெர்ட்ஸ் முதல் 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டுள்ளது.

பிராசஸர்

மாலி ஜி57 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (MediaTek Dimensity 6020) என்கிற 5ஜி பிராசஸர், இந்த புதிய விவோ ஒய்100ஐ போனில் பொருத்தப்பட்டிருக்கலாம். அதோடு ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆரிஜின் ஓஎஸ் 3 உள்ளது.

விவோ ஒய்36-ல் மாலி ஜி57 எம்பி2 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6020 என்கிற 5ஜி பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆரிஜின் ஓஎஸ் 3 உள்ளது.

சாம்சங்கின் புதிய கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ..! எப்போ அறிமுகம் தெரியுமா.?

மேலும், இந்த இரண்டு ஸ்மார்ட்போனிலும் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், அக்சிலரோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், கைரோஸ்கோப், அம்பியன்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்கள் உள்ளன.

கேமரா

விவோ ஒய்100ஐ-ன் கேமரா அம்சங்களைப் பார்க்கும்போது, இதில் ​​டூயல் ரியர் கேமரா அமைப்பு. இதன் கேமரா பம்ப் ஆனது சிறிது முன்னோக்கி வந்துள்ளது. இதில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 50 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2எம்பி டெப்த் கேமரா உள்ளது. மேலும், செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் செய்ய 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

விவோ ஒய்36 போனின் பின்புறத்தில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் செய்ய 5 எம்பி கேமராவும் உள்ளது. இரண்டிலும் நைட் சீன், போர்ட்ரெய்ட், மைக்ரோ மூவி, பனோரமா, ஸ்லோ மோஷன், டைம் லேப்ஸ் போட்டோகிராபி போன்ற கேமரா அம்சங்கள் உள்ளன.

பேட்டரி

தோராயமாக 190 கி எடை கொண்ட விவோ ஒய்100ஐ, 5000 mAh திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டிருக்கலாம். இதை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவற்றுடன் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கும் உள்ளது.

சவுண்ட் சும்மா பிச்சிக்கும்..! அறிமுகமானது BoAt-ன் இம்மார்டல் கட்டானா பிளேடு இயர்பட்ஸ்.!

இந்த விவோ ஒய்36 ஸ்மார்ட்போனில் 5000 mAh திறன் கொண்ட லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதை சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டுடன் கூடிய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

பிங்க் மற்றும் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாகியுள்ள விவோ ஒய்100ஐ போன், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 1,599 யுவான் (ரூ.18,400) என்ற விலையில், நவம்பர் 28ம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. ஸ்பேஸ் கிரே, கேலக்ஸி கோல்ட் மற்றும் ஃபேன்டஸி பர்பில் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் விவோ ஒய்36 போனில் 5 வேரியண்ட்கள் உள்ளன.

அதன்படி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 1,399 யுவான் (ரூ.16,000) என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 1,599 யுவான் (ரூ.18,500) என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 1,799 யுவான் (ரூ.20,600) என்ற விலையிலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 1,999 யுவான் (ரூ.22,999) என்ற விலையிலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 2,399 யுவான் (ரூ.28,299) என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்