இந்த பாம்புக்கும் விழுப்புரத்துக்கும் என்ன சம்பந்தம்னு தெரியுமா..?! தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்..!!
இன்றைய காலக்கட்டத்துல எளிமையாக கிடைக்காத ஒன்றாக கல்வியும், அதை சார்ந்த அறிவும் இருந்து வருகிறது. இதற்கு காரணம் சொல்லனும்னா இங்க இருக்குற ஒவ்வொருத்தரையும் நம்ம கை காட்ட வேண்டியது வரும். ஆனால், இதயெல்லாம் தாண்டி, படிப்பை முடித்து காட்டுவதே ஒரு பெரிய சாதனையாக தான் இங்க இருக்கிறது . கல்வி கற்பதற்கு முக்கிய தடையாக இருப்பது பொருளாதாரம் தான். அதாவது, நேரடியாக பணத்தை தான் இங்க குறிப்பிடுகிறோம்
ஒரு கல்லூரி மாணவர் எதாவது தொழிற்நுட்பத்தை கற்கவேண்டுமென்றால் அதற்க்கு ஏதாவது ஒரு பயிற்சி பட்டறைக்கு செல்ல வேண்டும்.அதற்க்கு பொருளாதாரம் மிக முக்கியம் , எல்லாவித தொழிற்நுட்பத்தையும் பயில முடியும். ஆனால் , பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் என்ன செய்வார்கள் !? விடை தரமுடியாதுன்னு நினைச்சிட்டு இருந்த இந்த கேள்விக்கு விடை தருவது தான் விழுப்புரத்தில் உள்ள “கட்டற்ற மென்பொருள் குழுமம்”. இதை ஆங்கிலத்தில் “Villupuram GNU Linux Users Group” (VGLUG) என்று சொல்றாங்க. இவங்களோட பேரு எந்த அளவுக்கு வித்தியாசமாக இருக்கோ அதே அளவுக்கு தான் இவங்களோட செயல்பாடுகளும் தரமான சம்பவமாக இருந்துட்டு வருது.
பாம்பும், விழுப்புரமும்..!
VGLUG- யாருனு அடுத்த பத்தியை படிச்சு தெரிஞ்சுக்கோங்க. அதுக்கு முன்னாடி பாம்புக்கும், விழுப்புரத்துக்கும் உள்ள இப்போதைய தொடர்ப இங்க தெளிவுபடுத்திடுவோம். அதாவது இந்த VGLUG குழு, தற்போது கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக Python என்கிற Programming Language-ஐ சொல்லி தரப்போறாங்க. யாராக இருந்தாலும் சரி Python-ஐ இலவசமாக கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், விழுப்புரத்தில் வருகின்ற ஜுலை மாதம் கடைசி வாரத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த Python கணினி மொழியை கற்றுத்தர போறாங்க.
இந்த பயிற்சியை சிறப்பாக பயன்படுத்தி, தனது திறமையை தனித்துவமாக வெளிக்காட்டும் மாணவர்களுக்கு 6 மாதங்கள் இன்டெர்ன்ஷிப்பும், கூடவே ஊக்கத்தொகையும் தரப்படுமாம். நீங்களும் Python-ஐ கற்றுக்கொண்டு ஜாம்பவனாக, கீழுள்ள லிங்க்கை க்ளிக் செய்து இப்போதே பதிவு செய்து கொள்ளுங்கள்.
https://vglug.org/
அப்படி என்ன செய்துட்டாங்க..!?
இந்த VGLUG கடந்த 7வருஷமாக விழுப்புரத்துல இயங்கி வந்துட்டு இருக்காங்க. இவங்களோட முக்கிய நோக்கமே தொழிற்நுட்பத்தை பற்றிய கல்வியை இலவசமாக எல்லா தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கறது தான். மாதத்திற்கு குறைந்தபட்சம் 2 கூட்டங்கள் (Meet Ups) ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்துறாங்க.
இந்த கூட்டங்கள்ல தொடர்ச்சியாக வந்து தொழிற்நுட்பத்தை பற்றிய அறிவை வென்றெடுத்த பல மாணவர்கள் இன்று சென்னை, பெங்களுர், ஹைதெராபாத், கொச்சி, திருவனந்தபுரம் போன்ற முன்னணி நகரங்களில் செயல்படும் பன்னாட்டு ஐ.டி நிறுவனங்களில் வேலை செய்து வராங்க. இது போல பல மாணவர்களை அறிவியல் ரீதியாகவும், சமூக அளவிலும் வளர்த்துவிடுவதே இவர்களின் சாதனையாக உள்ளது.
இதனால இவங்களுக்கு என்ன கிடைக்கும்?!
கல்வியை, பணத்துடன் சேர்த்த பன்முக அரசியலாக பார்க்கின்ற இன்றைய காலக்கட்டத்தில், இலவசமாக தொழிற்நுட்ப கல்வியை பயிற்றுவித்து வரும் VGLUG-கிற்கு கிடைப்பது உங்களை போன்ற மாணவர்கள் தான். ஆமாங்க! கல்வி அறிவு எப்போது இலவசமாக பகிரப்படுகிறதோ, அப்போது தான் எல்லா தரப்பு மக்களும் முன்னேற முடியும்னு இவங்க எல்லாருமே நம்புறாங்க. அதனாலேயே, வேலை கிடைச்சி வெவ்வேறு ஊருக்கு போயிருந்தாலும் நம்ம ஊருக்கு நாமதான் செய்யணும்னு வந்து நிக்குறாங்க.
அந்த வகையில் ஏற்கனவே VGLUG-யில் தொழிற்நுட்பம் சார்ந்த பலவற்றை கற்றுக்கொண்ட மாணவர்கள், தங்களது தொழிற்நுட்ப அறிவை மற்ற மாணவர்களுக்கு பகிர வேண்டும் என்கிற நோக்கம் தான் இந்த VGLUG-கிற்கு கிடைக்கின்ற முக்கிய பொக்கிஷமாகும்.
எப்போதும் கொண்டாட்டம் தான்!
VGLUG என்பது இன்று நேற்று வந்த ஒரு சாதாரண அமைப்பு அல்ல. கடந்த 7 வருடங்களாக வேரூன்றி செயல்பட்டு வருகின்ற மிக முக்கிய அமைப்பாகும். இவர்கள் தொழிற்நுட்பம் சார்ந்த பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். இவர்கள் நடத்திய பயிற்சி பட்டறைகள், கூட்டங்கள், வெளியிட்ட தொழிற்நுட்பங்கள் போன்றவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ள https://villupuramglug.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…