வேரோ(Vero) சமூக வலைதளம் மேலும் புதியவடிவில் வருகிறது..!!
வேரோ(Vero) என்ற சமூக வலைதளம் தனது பயன்பாட்டை அதிகரித்து வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு லெபனான் நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் அய்மேன் ஹரிரி என்பவரால் வேரோ சமூக வலைத்தளம் தொடங்கப்பட்டது. இது பிற சமூக வலைப்பின்னல்களில் பயனாளிகளுடன் எளிதில் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என்று அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களாக இந்த செயலியில் சில தொழில்நுட்ப கோளாறுகள் தென்படுவதாக கூறப்படுகிறது இந்த செயலி பயனாளிகளுக்குள் திரைப்படம், பாடல்கள் மற்றும் லிங்குகள், புகைப்படங்கள்ல் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கின்றது. இதனால் ஒரு உண்மையான சமூகவலைத்தளத்தை பயனாளிகள் அனுபவிக்கின்றனர்.
வேரோ இந்த பெயரின் அர்த்தம் உண்மை என்பது என்று இதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் வேரோவை விரும்பி பயன்படுத்துவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று விளம்பரம் என்பதே இதில் இல்லை. இதனால் இதில் பதிவாகும் கருத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படி தோன்றும், எந்த பதிவும் மிஸ் ஆக வாய்ப்பே இல்லை. இது நமது நண்பர்களை வகைப்படுத்தியும் கொடுக்கும். நெருங்கிய நண்பர்கள், நண்பர்கள், மற்றும் பாலோயர்கள் என வேறுபடுத்தி காண்பிப்பதால் பயன்படுத்த எளிதாக இருக்கும்.
மேலும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான பாதுகாப்பு செட்டிங் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கலெக்சன்ஸ் இந்த செயலில் ‘கலெக்சன்ஸ்’ என்ற ஒரு வசதி உள்ளது. இதை ஒரு நூலகம் போல் நீங்கள் பயன்படுத்தி உங்களுக்கு தேவையான பதிவுகள், கருத்துக்களை சேமித்து வைத்து கொண்டு தேவைப்படும் போது எடுத்து பார்த்து கொள்ளலாம். அதேபோல் வேரோ செயலில் தனிப்பட்ட தகவல்களை தனியாக பிரித்தெடுத்து பெர்சனல் என்று தனியாக சேமித்து வைக்கும் வசதியையும் அளித்துள்ளது. இதனால் நமது தனிப்பட்ட தகவல்கள் பரவிவிடும் என்ற பயம் இருக்காது.
அதற்காகத்தான் ஒரு கட்டணத்தை பெறுகிறது. இந்த செயலியை நீங்கள் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆனால் தொடர்ந்து அதில் செயல்பட வருட கட்டணத்தை பயனாளி செலுத்த வேண்டும். முதல் ஒருமில்லியன் பயனாளிகள் இந்த கட்டணத்தை கட்ட வேண்டிய அவசியம் இல்லை.