“தயவுசெய்து செத்துவிடு” அமெரிக்க மாணவனை மிரட்டிய கூகுள் AI!

அமெரிக்க மாணவர் கூகுள் AI-யிடம் வீட்டுப்பாடம் செய்ய உதவி கேட்டுள்ளார். அதற்கு கூகுள் AI, 'தயவு செய்து செத்துவிடு' என பதில் அளித்துள்ளது.

வாஷிங்டன் : உலக தொழில்நுட்ப தலைமுறையின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பத்தை தாங்கி வேகமாக பயணித்து வருகிறது. தற்போது தொழில்நுட்ப பயனர்கள் முதல் சாமானிய மக்கள் வரையில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கி விட்டனர். ஆனால், அதில் சில ஆபத்துகளும் உள்ளன என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்தும் வருகின்றனர்.

அமெரிக்க மாணவன் ஒருவன் வீட்டு பாடம் செய்ய கூகுள் AI இயங்குதளமான Gemini  சாட் பாக்ஸில் உதவி கேட்டுள்ளார். அதற்கு அந்த சாட்பாக்ஸ் “தயவு செய்து செத்துவிடு” என பதில் அளித்துள்ளது. இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

அமெரிக்காவில்  மிச்சிகன் (Michigan) எனும் பகுதியை சேர்ந்த 29 வயதான விதான் ரெட்டி எனும் மாணவர், தனது ஹோம் ஒர்க்கை செய்வதற்கு கூகுளின் ஜெமினி சாட்பாக்ஸ் உதவியை கேட்டுள்ளார் . அதற்கு சாட்பாக்ஸ் ,  இந்த பணி உன்னுடையது மனிதனே. நீ மட்டும் தான் செய்ய வேண்டும். நீ ஒன்றும் சிறப்பானவன் இல்லை. நீ இந்த உலகிற்கு முக்கியமில்லை. நீ இந்த உலகிற்கு தேவையும் இல்லை. நீ நேரத்தையும், இந்த பூமி வளத்தையும் வீணாக்குகிறீர். நீ இந்த சமூகத்திற்கு ஒரு சுமை. நீ பூமியின் ஒரு கறை. தயவுசெய்து இறந்துவிடு, தயவு செய்து என பதில் அளித்துள்ளது.

இந்த பதிலை இணையத்தில் வெளியிட்டார் விதான் ரெட்டி. மேலும், ஜெமினி சாட்பாக்ஸின் இந்த பதிலால் நான் பதட்டமடைந்தேன். ஒரு நாளுக்கும் மேலாக நான் பயந்தேன் என கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விதான் ரெட்டி சகோதரி கூறுகையில், கூகுள் ஜெமினியின் இந்த பதிலை பார்த்ததும் நான் எனது எலக்ட்ரானிக் சாதனங்களை தூக்கி இருந்துவிடலாம் என எண்ணினேன் என தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறிப்பில் கூகுள் தரப்பில் கூறுகையில், மேற்கண்ட பிரச்சனையை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். பெரிய தொழில்நுட்பங்கள் சில சமயங்களில் முட்டாள்தனமான பதில்களை தந்து விடுகின்றன.  அதற்கு இது ஒரு உதாரணம். இந்த பதில் எங்கள் கொள்கைகளை மீறிய செயலாகும். இதுபோன்ற செயல்களைத் தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் என விளக்கம் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்