அமெரிக்கா டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதிப்பு….!!!
- டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதிப்பு.
- குழந்தைகளின் அந்தரங்க விவரங்களைச் சேகரித்த டிக் டாக் செயலி.
டிக் டாக் செயலி குழந்தைகளின் விவரங்களை முறைகேடாகச் சேகரித்த குற்றச்சாட்டில் டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்துள்ளதுஅமெரிக்கா.
அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம்
குழந்தைகளின் அந்தரங்க விவரங்களைச் சேகரித்த விவகாரத்தில், டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வர்த்தக ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க விதிமுறையை மீறிய டிக் டாக் செயலி
அந்த செய்தி குறிப்பில், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களின் வரிசையில் டிக் டாக்கும் இணைந்துள்ளது.
அமெரிக்கச் சட்டத்தின்படி 13 வயதுக்குக் குறைவான குழந்தைகள், செயலிகளைப் பயன்படுத்தும் முன்னர் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த விதியினை டிக் டாக் கடைபிடிக்கவில்லை.
பெற்றோரின் அனுமதி
ஏராளமான குழந்தைகள் இந்த டிக் டாக் செயலியை பயன்படுத்துவது தெரிந்தும் அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கவில்லை.
மேலும், டிக் டாக் செயலி குழந்தைகளின் பெயர்கள், இ-மெயில் முகவரிகள் மற்றும் பிற சொந்த விவரங்களைப் பெறும் முன்னர், பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அமெரிக்காவின் விதிமுறைகளை இந்த செயலி கடைபிடிக்கவில்லை.
டிக் டாக் செயலிக்கு அபராதம்
அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையம், டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும் இது குறித்து கூறுகையில், குழந்தைகளைக் குறிவைக்கும் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் இணையதளங்களுக்கும் இந்த அபராதம் ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கான சட்டத்தை மீறும் நிறுவனங்களை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம்” என்று அமெரிக்க வர்த்தக ஆணையம் இந்த குறிப்பில் தெரிவித்துள்ளது.