பே நவ் உடன் யுபிஐ இணைப்பு..! சிங்கப்பூரில் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி..!
பேநவ் (PayNow) உடன் யுபிஐ (UPI) இணைப்பை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
சிங்கப்பூரில் பிரதமர் மோடி, பேநவ் (PayNow) உடனான யுபிஐ இணைப்புகளைத் தொடங்கி வைத்தார். பல வருடங்களுக்கு முன்னதாக தபால் மற்றும் நேரடியாக பண பரிவர்த்தனைகள் நடந்தது. தற்பொழுது வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில் கூகுள்பே, பேடிஎம் வாயிலாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் உடன் இணைந்து காணொளி வாயிலாக பேநவ் (PayNow) உடன் நிகழ் நேர கட்டணமுறை இணைப்புகளை (யுபிஐ ) தொடங்கி வைத்தார். நிகழ்நேர டிஜிட்டல் கட்டண முறைகளை நாங்கள் இணைப்பதால், இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு இடையேயான உறவிற்கு ஒரு புதிய மைல்கல் என்று பிரதமர் கூறினார்.
இதன் மூலம் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் சென்று வசிக்கும் நண்பர்கள், உறவினர்களுக்கு இங்கிருந்தே கூகுள்பே (Google Pay), பேடிஎம் (PayTM) மற்றும் பிற டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். மேலும் சிங்கப்பூரில் உள்ளவர்களும் இந்தியாவில் உள்ளவர்களுக்கு பணம் அனுப்ப முடியும். இதனால் வேகமாகவும், குறைந்த செலவிலும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.