தற்சமயம் இன்ஸ்டாகிராமில் பல்வேறு புதிய வசதிகள் வந்த வண்ணம் உள்ளது.இந்த இன்ஸ்டாகிராம் குறிப்பிட்ட சில நாட்களிலேயே புகழ் பெற்றது. அதன்படி பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்ப்படும் முன்னணி புகைப்பட பகிர் தளமான இன்ஸ்டாகிராமில் வேகமாக புகைப்படம் மற்றும் வீடியோவை டவுண்லோடு செய்ய ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பகா இனஸ்டாகிராம் சேவையை மாதம் தோறும் 800 மில்லியன் வாடிக்கையாளர் பயன்படுத்துவதுடன், நாள் தோறும் 500 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.
தற்சமயம் இனஸ்டாகிராமில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை மாத்திரமின்றி சிறிய அளவிலான வீடியோ மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்வதற்கு புதிய அப்ளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்ளிக்கேஷன் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.
தற்சமயம் வெளிவந்துள்ள FastSave for Instagram எனும் அப்ளிக்கேஷனைக் கொண்டு இனஸ்டாகிராம் வீடியோ, புகைப்படம் மற்றும் கோப்புகளை விரைவாக பதிவிறக்கம் செய்ய முடியும். அதன்பின்பு இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்த சில வழிமுறைகள் உள்ளது.
முதலில் FastSave for Instagram அப்ளிக்கேஷனை உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும், அதன்பின்பு உங்கள் இனஸ்டாகிராமில் இருக்கும் வீடியோ, புகைப்படம், கோப்புகள் போன்றவற்றின் URL-ஐ அந்த அப்ளிக்கேஷனில் உட்புகுத்தி எளிமையாக டவுண்லோடு செய்துகொள்ள முடியும்.
மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சங்கள் வெளிவரும் என்று உறுதி செய்யும் வகையில் ஆண்ட்ராய்டு ஆல்ஃபா மூலம் தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் பல மில்லியன் மக்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் வழங்கப்படும் பட்சத்தில் ஸ்னாப்சாட் செயலிக்கு மாற்றாக அமைய வாய்ப்புகள் உள்ளது, மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களும் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.