பேஸ்புக் நிறுவனத்தின் “டேட்டா திருட்டு” குற்றச்சாட்டுகள் வெளியான நாளில் இருந்து, பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் மீதான ஒரு சந்தேக பார்வை தானாகவே கிளம்பியது. அதனை தொடர்ந்து வாட்ஸ்ஆப்பும் பயனர்களின் டேட்டாவை திருடுவதாக குற்றசாட்டுகள் எழுந்தன.
நடைமுறைக்கு வரும் புதிய கொள்கைகளோடு சேர்த்து, Request Account info என்கிற ஒரு அம்சமும் இடம் பெற உள்ளது. வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் அடுத்த பதிப்பானது, மே 25-ல் வெளியானால், இந்த அம்சத்தினை அனைவராலும் பார்க்க முடியும். இந்த அம்சமானது வாட்ஸ்ஆப் மூலம் சேகரிக்கப்படும், பயனர் ஒருவரின் சிறிய அளவிலான டேட்டாவை டவுன்லோட் செய்ய உதவும்.
“ரெக்வஸ்ட் அக்கவுண்ட் இன்ஃபோ” என்கிற இந்த புதிய அம்சமானது, வாட்ஸ்ஆப்பின் செட்டிங்ஸ்-ல் காணப்படும். அதை கிளிக் செய்து பின்னர் ‘அக்கவுண்ட்’ என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய “ரெக்வஸ்ட் அனுப்பட்டது” என்கிற நோட்டிபிகேஷன் கிடைக்கும். கோரிக்கை நிகழ்த்தப்பட்ட தேதியிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்குள் வந்து சேரும். ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர் நடுவில் ரத்து செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை கண்டிப்பாக அனுப்பிய ரெக்வஸ்ட்டை கேன்சல் செய்ய வேண்டும் என்றால், ஒன்று உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும் அல்லது, வாட்ஸ்ஆப் நம்பரை மாற்ற வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை செய்வதின் விளைவாக, அனுப்பட்ட கோரிக்கையை ரத்து செய்யலாம்.
உங்கள் அக்கவுண்ட் சார்ந்த விவரங்கள் டவுன்லோட் செய்ய திறந்து விடப்பட்டுள்ளது என்கிற தகவலை வாட்ஸ்ஆப் உங்களுக்கு அனுப்பி வைக்கும். அந்த அறிவிப்பு கிடைத்த அடுத்த சில வாரங்களுக்குள் அதை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும். இல்லையெனில் அது வாட்ஸ்ஆப் சேவையகங்ளில் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் நீக்கப்படும்.
மேற்குறிப்பிட்ட அதே வழிமுறைகளை பின்பற்ற இறுதியாக “டவுன்லோட் ரிப்போர்ட்” என்கிற ஒரு விருப்பம் உங்களுக்கு கிடைக்கும். அதை டாப் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். டவுன்லோட் செய்யப்பட்ட டேட்டா ஆனது ஸிப் பைல் வடிவத்தில் அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. சுவாரசியம் என்னவெனில், டவுன்லோட் செய்த ரிப்போர்ட்டை நிரந்தரமாக டெலிட் செய்யும் ஒரு அம்சத்தையும் வாட்ஸ்ஆப் வழங்குகிறது.