12ஜிபி ரேமிற்கு ரூ.12,000 வரை கேஷ்பேக்.! முதல் விற்பனைக்கு களமிறங்கிய ஃபைண்ட் என்3 ஃபிளிப்.!
Oppo Find N3 Flip: ஃபோல்டபிள் மற்றும் ஃபிளிப் ஸ்மார்ட்போன்கள் ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில், கடந்த அக்டோபர் 12ம் தேதி இரவு 7 மணியளவில் ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் (Find N3 Flip) ஸ்மார்ட்போனை இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து, ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போன் அக்டோபர் 22ம் தேதி முதல், வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த புதிய ஃபிளிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று முதல் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
டிஸ்பிளே
இந்த ஸ்மார்ட்போனில் 2520×1080 பிக்சல் ஹைரெசல்யூஷன் கொண்ட 6.8 இன்ச் (17.27 செமீ) எஃப்எச்டி பிளஸ் எல்டிபிஓ அமோலெட் மெயின் டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 120 ஹெர்ட்ஸ் முதல் 240 ஹெர்ட்ஸ் வரையிலான டச் சம்ப்ளிங் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் உள்ளது.
OPPO Find N3 Flip: ஆரம்பமே ரூ.12,000 தள்ளுபடி.! அதிரடி சலுகையுடன் ஒப்போவின் புதிய ஃபைண்ட் என்3 ஃபிளிப்.!
அதோடு, 720×382 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 3.26 இன்ச் (8.28 செமீ) அமோலெட் கவர் டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளேயில் 30 முதல் 60 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 120 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட் மற்றும் 900 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் உள்ளது. பாதுகாப்பிற்காக கொரில்லா கிளாஸ் விக்டஸ் உள்ளது.
இந்த கவர் டிஸ்ப்ளே ஆனது மற்ற ஸ்மார்ட்போன்களில் உள்ள கவர் டிஸ்பிளேவில் இருந்து சற்று வித்தியாசமானதாக இருக்கும். இதில் ஸ்விக்கி, சொமேட்டோ, புக் மை ஷோ மற்றும் பல இந்திய பயன்பாடுகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட ஆப்ஸ், கவர் ஸ்கிரீன் விட்ஜெட்டுகள் மற்றும் பல கவர்-டிஸ்ப்ளே ஸ்டைல்களை பயன்படுத்த முடியும்.
பிராசஸர்
பைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனில் ஏஆர்எம் இம்மார்டலிஸ்-ஜி715 எம்சி 11 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட 8 கோர்களைக் கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 9200 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
அதோடு ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 13.2-ல் இயங்குகிறது. கிராவிட்டி சென்சார், இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் சென்சார், கைரோஸ்கோப், ஸ்டேப் கௌண்டிங், ப்ராக்ஸிமிட்டி சென்சார் போன்ற சென்சார்களும் உள்ளன.
கேமரா
இந்த ஸ்மார்ட்போனில் வட்ட வடிவ ட்ரிபிள் ரியல் கேமரா அமைப்பு உள்ளது. அதன்படி, பின்புறத்தில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் அம்சத்துடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா, 48 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 32 எம்பி டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். முன்புறம் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய 32 எம்பி கேமரா உள்ளது.
இந்த இரண்டு கேமராவினாலும் 4k தெளிவுடன் கூடிய விடியோவை பதிவு செய்ய முடியும். இதில் போர்ட்ரெய்ட், ப்ரோ மோட், பனோரமா, மூவி, ஸ்லோ மோஷன், லாங் எக்ஸ்போஷர், டைம் லேப்ஸ், ஸ்டிக்கர், டெக்ஸ்ட் ஸ்கேனர், எக்ஸ்பான், ஹை-ரெஸ் மற்றும் கூகுள் லென்ஸ் போன்ற அம்சங்கள் உள்ளன.
பேட்டரி
198 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போனில் நீண்ட நேர பயன்பாட்டிற்காக 4300 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டுடன் கூடிய 44 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதில் இருக்கும் அலர்ட் ஸ்லைடர் ஸ்மார்ட்போனை சைலெண்ட், ரிங் அல்லது வைப்ரேட்டில் வைக்க பயன்படுத்தலாம்.
12 ஜிபி ரேம்..13 எம்பி கேமரா..6.56 இன்ச் டிஸ்பிளே.! ஒப்போவின் நியூமாடல் எது தெரியுமா.?
ஸ்டோரேஜ் மற்றும் விலை
கிரீம் கோல்ட் மற்றும் ஸ்லீக் பிளாக் என இரண்டு வண்ணங்களில் வெளியாகியுள்ள என்3 ஃபிளிப் ஆனது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் அறிமுகமானது. இந்த 12 ஜிபி வேரியண்ட் விலை ரூ.94,999 ஆகும். இதனை ஒப்போவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் வாஙகிக்கொள்ளலாம்.
சலுகை
எஸ்பிஐ, ஐசிஐசிஐ, கோடக் பேங்க் மற்றும் பஜாஜ் பின்சர்ப் கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.12,000 வரையிலான கேஷ்பேக் மற்றும் 12 மாதங்களுக்கான நோ காஸ்ட் இஎம்ஐ வசதி உள்ளது. மேலும், கூடுதலாக ரூ.8000 வரை எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படும் என்றும், ஒன் டைம் ஸ்கிரீன் ரீப்ளேஸ்மென்ட் செய்து தரப்படும் எனவும் ஓப்போ உறுதி அளித்துள்ளது.