வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு என்று புதிய சலுகை ஒன்றை அதிரடியாக அறிவித்துள்ளது.
பிரீபெயிட் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா மற்றும் அன்ல்மிட்டெட் வாய்ஸ் கால் ஒரு வருடத்திற்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த சலுகை ஆனது ஏற்கனவே வோடபோன் சிட்டிபேங்க் சலுகையை ஐடியா செல்லுலார் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வந்ததை போன்றது ஆகும்.
அதன் படி இந்த சலுகையானது ஜூலை 31 2019 வரை வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளது.மேலும் சலுகைகளை சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, டெல்லி, நொய்டா, குர்கிராம், பூனே, ஆமதாபாத், செக்கந்தராபாத், பரோடா, ஜெய்பூர், மும்பை மற்றும் சண்டிகர் இவைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் இந்த வகை புதிய சலுகைகளை பெற வேண்டுமானால் பயனர்கள் ஏற்கனவே தங்களிடம் உள்ள பிரீபெயிட் சேவையை வேண்டும்.பின்னர் வோடாபோன் சலுகைகள் அடங்கி உள்ள வலைதளத்திற்கு சென்று அதில் புதிதாக உள்ள கிரெடிட் கார்டு ஒன்றிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பித்தவர்கள் இந்த கிரெடிட் கார்டை பெற்ற உடன் அதில் குறைந்த பட்சமாக ரூ.4000 செலுத்தினால் ஒருவருடத்திற்கு இந்த வகை சேவைகளை தினமும் பயன்படுத்தலாம்.
மேலும் இதெல்லாம் கார்டு வாங்கிய 30 நாள்களுக்குள் ரூ.4000 தொகைக்கு பயன்படுத்த வேண்டும்.இதனை ஒரே சமயத்திலும் பயன்படுத்தலாம் அல்லது சிறிது சிறிதாகவும் பயன்படுத்தலாம்.இவ்வாறு செய்தால் தினமும் 1.5 GB டேட்டாவையும் ,அன்லிமிட்டாடு வாய்ஸ் கால்களையும் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…