மாற்று திறனாளிகளுக்கு ஏற்ற அரியவகை அப் :- YESABLE..!
மாற்று திறனாளிகளோ கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெறுவதற்கு பல்வேறு சிறமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
தற்சமயம் கோவை மாவட்டத்தில் பார்வையற்ற மாற்று திறனாளிகள் தேர்வு எழுத வசதியாக பார்வையற்றோர் மற்றும் தன்னார்வலர்களை இணைக்கும் வகையில் YESABLE என்ற புதிய ஆண்ட்ராய்டு ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது கண்டிப்பாக பல்வேறு பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் உள்ளது. மேலும் சீர்செய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த பார்வையற்றோர் மற்றும் தன்னார்வலரை இணைக்கும் வகையிலான YESABLE என்ற அசத்தலான ஆப் வசதியை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த YESABLE ஆப் வசதியின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், பார்வையற்ற மாற்று திறனாளிகள் தங்களது ஆண்ட்ராய்டு மொபைல்களில் இந்த ஆப் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்வது, பின்பு தேர்வு எழுத ஆட்கள் தேடுவதற்கான விவிரங்களை இதில் நேரடியாக பதவிடலாம்.
குறிப்பாக இதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை. தற்சமயம் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்துள்ள இந்த YESABLE ஆப் வசதி விரைவில் மற்ற மொழிகளில் வெளிவரும் என்று இதன் வடிவமைப்பாளர்கள் கூறியுள்ளனர். அனைவருமே கடினமான சவால்களை சந்திக்கின்றனர். அனைவர்க்கும் கனவுகள் உள்ளன, அனைவரும் தங்கள் தடைகளை தாண்டி முன்னேறுகின்றனர். ஆனால் வெகுசிலரே, சமுதாயம் அவர்களுக்கு விதிக்கும் எல்லைகளைத் தாண்டி முன்னேறுகின்றனர்.