தமிழ்நாட்டை அடிப்படையாக கொண்ட ஏர்பைபர் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது ஆனது, அதன் 200 Mbps வேகத்திலான புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
அன்லிமிடெட் இன்டர்நெட் வேகத்தை வழங்கும் ஏர்பைபர் (AirFiber) நிறுவனத்தின் ஹோம் அன்லிமிடெட் திட்டங்களானது வெறும் ரூ.699/-க்கு தொடங்குகிறது மற்றும் இந்த திட்டங்கள் ஆனது 5 Mbps முதல் 200 Mbps வரையிலான போர்ட் ஸ்பீட்டை வழங்குகின்றன. அடிப்படைத் திட்டமான ரூ. 699/- (மாதாந்திர வாடகை திட்டம்) ஆனது 5 Mbps வேகத்திலான வரம்பற்ற இணைய அணுகலை வழங்குகிறது.
எப்யூபி திட்டங்களை பொறுத்தவரை, அதன் அன்லிமிடெட் திட்டங்களை விட மலிவான விலை நிர்ணயம் மற்றும் கூடுதல் இணைய வேகம் அளிக்கும் திட்டங்களைக் கொண்டுள்ளது. ஆனால், அன்லிமிடெட் அல்ல, வரம்புக்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது குறிப்பிட்ட வரம்பை தாண்டிய பின்னர், இணைய வேகம் குறையும்.
இரண்டாவது திட்டமானதும் அதே 50 Mbps போர்ட் வேகத்தினை தான் வழங்குகிறது. ஆனால், டேட்டா நன்மையில் வேறுபடுகிறது, அதாவது மொத்தம் 40 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதன் விலை ரூ.699/ ஆகும். குறிப்பிட்டுள்ள டேட்டா எல்லையை தாண்டிய பின்னர், இந்த பேக்கின் இணைய வேகமானதும் 1 Mbps ஆக குறையும்.
மூன்றாவதாக, 100 Mbps போர்ட் வேகம் கொண்ட திட்டமானது மொத்தம் 80 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதன் விலை ரூ.799/ ஆகும். குறிப்பிட்டுள்ள டேட்டா எல்லையை தாண்டிய பின்னர் இணைய வேகமானது 1 Mbps ஆக குறையும்.
50 Mbps போர்ட் வேகத்திலான மூன்று வெவ்வேறு டேட்டா வரம்புகளை வழங்குகிறது. அதாவது 20 ஜிபி, 60 ஜிபி மற்றும் 75 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, முறையே ரூ.649, ரூ.799 மற்றும் ரூ.949/- ஆகும்.
100 ஜிபி, 150 ஜிபி, 200 ஜிபி, 250 ஜிபி, 300 ஜிபி மற்றும் 400 ஜிபி.! மீதமுள்ள ஆறு திட்டங்கள் ஆனது, 100 Mbps போர்ட் வேகத்திலான ஆறு வெவ்வேறு டேட்டா வரம்புகளை வழங்குகிறது. அதாவது 100 ஜிபி, 150 ஜிபி, 200 ஜிபி, 250 ஜிபி, 300 ஜிபி மற்றும் 400 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, முறையே ரூ.1099, ரூ.1249, ரூ.1399, ரூ.1699, ரூ.1999/- மற்றும் ரூ.2609/- ஆகும். கமெர்ஷியல் பிளான்ஸ் தொகுப்பின் கீழ், வரம்புகள் இல்லாத திட்டங்களும் உள்ளன. 1 Mbps, 2 Mbps மற்றும் 4 Mbps போர்ட் வேகங்களை வழங்கும் ரூ.609, ரூ.739/- மற்றும் ரூ.999/- திட்டங்கள் கிடைக்கின்றன. இப்படியாக, 10 Mbps வேகத்திலான ரூ.1399/- திட்டம் தொடங்கி 20 Mbps வேகத்திலான ரூ.2199/- வரை செல்கிறது.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…