ட்விட்டர் பயனாளிகளுக்கு 3 புதிய நற்செய்தி காத்துள்ளது! என்னனு தெரிஞ்சிக்கோங்க..

Default Image

ஒரு சிறிய செய்தியை உடனே பரவ செய்ய சமூக ஊடகங்கள் முக்கிய இடத்தில் உள்ளது. அதிலும் “சுருங்க சொல்லி விளங்க வைக்கும்” அமைப்புடன் கூடிய ட்விட்டர் தான் பலரையும் கவர்ந்து வருகிறது. இப்போதெல்லாம் ட்விட்டரில் போடும் ட்வீட்டுகள் தான் அதி பயங்கரமாக மக்களிடம் கொண்டு சேர்கின்றன. இதற்காகவே இது மிகவும் பிரபலமாக உள்ளது. ஏற்கனவே பல சிறப்பம்சங்களை இது கொண்டிருந்தாலும், மேலும் சில சிறப்பம்சங்களை இதில் சேர்த்து உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.

சிறப்பம்சம் #1
முன்பெல்லாம் ஒரே நேரத்தில் எல்லா ட்விட்டுகளையும் அழிக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தோம். ஆனால், இனி எல்லா ட்வீட்களையும் ஒரே நேரத்தில் அழிக்கும் வசதியை ட்விட்டரில் அப்டேட் செய்துள்ளனர்.


சிறப்பம்சம் #2
தேவையற்ற முறையில் உங்களை தொல்லை செய்து ட்வீட் போடுவோர்களை இனி நீங்கள் எளிதாக பிளாக் செய்து விடலாம். இது பெண்களுக்கு முக்கியமாக பாதுகாப்பு அரணாக விளங்கும் என இந்நிறுவனம் கூறியுள்ளது. இதை “ஸ்வைப் மூவ் பிளாக் ” என்கிற ஆப்ஷனை கொண்டு பிளாக் செய்து விடலாம்.

சிறப்பம்சம் #3
எப்படி வாட்ஸப்பில் 24 மணி நேரத்திற்கு பின் நாம் போட்ட ஸ்டேட்டஸ் மறைந்து விடுகிறதோ அதே போன்ற வசதி ட்வீட்டரில் கொண்டுவர பட்டுள்ளது. ஆதலால், சில மணி நேரத்திற்கு பின் உங்களின் பழைய ட்வீட்கள் மறைந்து விடும் வசதியும் இதில் அப்டேட் செய்யபட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்