லாபமே இல்லை! 35% ஊழியர்களை பணி நீக்கம் செய்த ட்விட்ச்!

Termination of employees

அமேசானின் லைவ் ஸ்ட்ரீமிங் தளமான ட்விட்ச் நிறுவனம் தற்போது லாபமின்மை காரணமாக 35% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சமீபகாலமாக பல நிறுவனங்களை தங்களுடைய ஊழியர்களை பணி  நீக்கம் செய்து வருகிறது. அந்த வரிசையில் ட்விட்ச் நிறுவனம் இணைந்துள்ளது.

கடந்த 2023 -ஆம் ஆண்டு ட்விட்ச் தலைமை வாடிக்கையாளர் அதிகாரி மற்றும் தலைமை உள்ளடக்க அதிகாரி உட்பட பல உயர் நிர்வாகிகள் அந்த  நிறுவனத்திலிருந்து தங்களுடைய பதவிகளில் இருந்து விலகினார்கள். இவர்கள் பதவிகளில் இருந்து விலகிய பிறகு ட்விட்ச் நிறுவனம் தங்களுடைய வருவாயை இழந்ததாக கூறப்படுகிறது.

1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பேடிஎம்! காரணம் இது தான்…

எனவே, நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால், 500 ஊழியர்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார்கள். கடந்த 2023 -ஆம் ஆண்டு 25,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதத்தில் ட்விட்ச் நிறுவனம்  35% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ட்விட்ச் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் க்ளான்சி தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் இது குறித்து கூறியதாவது ” இன்று எங்கள் பணியாளர்களின் அளவைக் குறைக்க நாங்கள் கடினமான முடிவை எடுத்துள்ளோம். இந்த  தகவலை உங்களுக்குத் தெரிவிக்கவும் நான் விரும்புகிறேன்”  என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்ச் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டதாவது “திடீரென பணிநீக்கம் குறித்து அறிவிப்பை வெளியீட்டுள்ளதால் என்ன நடக்கிறது என்று உங்களில் பலர் ஆச்சரியப்படுவது எனக்கு தெரிகிறது.  ட்விட்ச் நீண்ட காலத்திற்கு இருக்கும் வகையில், ஒரு நிலையான வணிகத்தை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். எனவே செலவுகளைக் குறைத்து பலவற்றைச் மேம்படுத்தவேண்டும் என்று இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்., நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதனால் 500 ஊழியர்கள் ஊழியர்களை பணி நீக்கம்  செய்துள்ளோம் என அறிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்