ட்வீட்டர் அதிரடி :கிரிப்டோகரன்சிக்கு(cryptocurrency) தடை..!

Default Image

 

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும்  கூகுளை தொடர்ந்து ட்வீட்டர் தளமும், கிரிப்டோகரன்சி (cryptocurrency) எனப்படும் டிஜிட்டல் சொத்து சார்ந்த விளம்பரங்களை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் பேஸ்புக் அதன் தளத்தில் காட்சிப்படும் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் சார்ந்த விளம்பரங்களை தடை செய்தது. வஞ்சகமான விளம்பரதாரர்களை எதிர்க்கும் முயற்சியின்கீழ் பேஸ்புக் நிறுவனம், அந்த தடையை அறிவித்தது.

பேஸ்புக்கை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் கிரிப்டோகரன்சிகள் மீதான விளம்பரங்களை தடை செய்யவதாக கடந்த வாரம் அறிவித்திருந்த நிலைப்பாட்டில் தற்போது நியூஸின் படி, ட்வீட்டர் நிறுவனத்தின் புதிய விளம்பரக் கொள்கைகளின்கீழ், ஐஓசி-க்கள், டோக்கன் விற்பனை, மற்றும் கிரிப்டோகரன்சி சார்ந்த விளம்பரங்கள் உலகளாவிய முறையில் தடை செய்யப்படவுள்ளது.

ட்வீட்டர் தளத்தில் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் சார்ந்த விளம்பரங்கள் தடை செய்யப்படும்.

இது க்ரிப்டோகரன்சிகள் மீதான ட்வீட்டர் நிறுனத்தின் முதல் தாக்குதல் அல்ல என்பதும், இதற்கு முன்னர் சிறிய அளவிலான கிரிப்டோகரன்சி கோரிக்கைகளை கேட்கும் ட்வீட்டர் கணக்குகளை நிறுவனம் முடக்கியதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்