TRAI யின் புதிய சேவை அறிமுகம்..!மிகவும் குறைந்த விலையில் டேட்டா …!!
இந்தியாவில் முன்பு தொலைபேசி சேவையை வழங்க பிசிஒ-க்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன, மேலும் நாடு முழுவதும் அதிக வரவேற்பை பெற்றது இந்த பிசிஒ. ஆனால் இன்று வைஃபை சேவையை மேம்படுத்தும் நோக்கில் பிடிஒ என்ற பெயரில் புதிய சேவை துவங்கப்பட இருக்கிறது.
மேலும் மத்திய டெலிகாம் துறை ஒழுங்குமுறை ஆணையம் ( TRAI) தற்சமயம் பிடிஒ எனப்படும் பொது டேட்டா அலுவலக திட்டத்திற்கான முன்னுரிமையை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த புதிய திட்டத்தின் கீழ் துவங்கும் டேட்டா திட்டங்களின் விலை ரூ.2 முதல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அதன்படி பிடிஒ என்ற பெயரில் வரும் வைஃபை சேவை கண்டிப்பாக ஜியோவுக்கு போட்டியாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிடிஒ என்ற பெயரில் துவங்கும் இந்த புதிய சேவை பொறுத்தவரை இண்டர்நெட் கட்டணங்களை அதிகபட்சம் 90சதவீதம் குறைக்கும் எனமத்திய டெலிகாம் துறை ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய டெலிகாம் துறை ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவரும் இந்த திட்டம் நாடு முழுவதும் இன்டர்நெட் சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் பிராட்பேண்ட் பயன்பாட்டிற்கு மாற்றாக கிராமங்களில் அதிவேக இன்டர்நெட் வசதி இந்த திட்டம் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிராய் அறிவித்துள்ள இந்த திட்டத்தில் சேஷெட் வடிவில் டேட்டா கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே பயனர்கள் தங்களின்ஸ்மார்ட்போனில் வைஃபை மூலம் பயன்படுத்தமுடியும். மேலும் இந்த திட்ட வடிவம் மந்திரி மனோஜ் சின்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய டெலிகாம் துறை ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ள இந்த வைஃபை திட்டத்தில் பயனர்களுக்கு அதிவேக இணையம் கிடைக்கும், மேலும் அனைத்து இடங்களிலும் வைஃபை ஹாட்ஸ்பாட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. என மத்திய டெலிகாம் துறை ஒழுங்குமுறை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
.