இனி TrueCaller தேவையில்லை… நம்பர் மட்டும் போதும்.! TRAIயின் புதிய உத்தரவு.!
இந்தியாவில் உள்ள நெட்வொர்க் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்புகளின் போது அவர்களின் பெயர்களை (true caller போன்று) நம்முடைய டிஸ்பிளேயில் காண்பிக்கும் அம்சத்தை வழங்குமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய் (TRAI) பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பல்வேறு நெர்ட்வொர்க்களை பயன்படுத்தி வருகின்றனர். புதிய நம்பர்களில் இருந்து அழைப்புகள் வரும்போது பெயர் வருவதில்லை, நம்பர் மட்டுமே வரும். இதனால் பலர் true caller போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி இருந்தால், புதிய நம்பர்களில் இருந்து தங்களது போன்களுக்கு அழைப்புகள் வரும்போது, அத்துடன் பெயரும் சேர்ந்து காண்பிக்கும்.
இது மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு உதவியாக இருக்கிறது. இதன் காரணமாக பலரும் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பல்வேறு சிக்கல்களும் இருக்கிறது. இந்த நிலையில், தொலைபேசி அழைப்புகளின்போது அழைப்பாளர்களின் பெயரை பெருநர்களுக்கு காண்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று நெட்வொர்க் வழங்குநர்களுக்கு ட்ராய் பரிந்துரைத்துள்ளது. இந்த அம்சத்தின் பெயர் CNAP என்று அழைக்கப்படுகிறது.
Read More – சர்ச்சை படங்களை உருவாக்கிய ஜெமினி AI சாட்பாட் ..! தற்காலிகமாக நிறுத்தியது கூகுள் நிறுவனம் ..!
இது இந்திய தொலைத்தொடர்பு நெட்வொர்க் மற்றும் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து சாதனங்களிலும் ஒரு துணை சேவையாக வெளியிடப்பட வேண்டும் என்று டிராய் பரிந்துரைத்துள்ளது. டெலிகாம் ரெகுலேட்டர் தனது பரிந்துரையில், ஒவ்வொரு நெட்வொர்க் வழங்குநரும் ஏர்டெல் அல்லது ஜியோ போன்ற நிறுவனங்கள் முதலில் ஒரு உரிமம் பெற்ற சேவையில் (எல்எஸ்ஏ) சோதனை மற்றும் மதிப்பீட்டை, அதிலிருந்து ஒவ்வொரு டிஎஸ்பியின் சந்தாதாரர் தளத்துடன் மேற்கொள்கின்றன என்று கூறியது.
இதனால் ரெகுலேட்டர் பரிந்துரைத்த பெயர், எண்ணைப் பதிவு செய்யும் போது பயன்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். தொலைபேசி எண்ணைப் பெற்றதில் இருந்து நபரின் பெயர் மாறியிருந்தால், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சரிபார்க்கக்கூடிய அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி பெயர்களை திருத்துவதற்கு தொலைத்தொடர்புத் துறை TSP-களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குமாறு ட்ராய் பரிந்துரைத்தது.
சந்தாதாரர்கள் தங்கள் “பெயரை காண்பிப்பதற்கு விருப்பம் கொடுக்கப்பட வேண்டும். இது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பதிவு செய்யப்பட்ட பெயராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், CNAP என்ற காலர் பெயர் காட்டும் அம்சத்தில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் நெட்வொர்க் நிறுவனங்கள் கூறியுள்ளது.