பெண்களே உஷார் !பேஸ்புக்கில் பழகி,வாட்ஸ்-ஆப் நம்பர் வாங்கி பெண்களின் செல்போனுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பிய இளைஞர் …..
நாமக்கல்லில் போலீசார் ஃபேஸ்புக்கில் 300க்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி செல்போன் எண்களைப் பெற்று, அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களுக்கே வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பி தொந்தரவு செய்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த 28 வயது பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவரது செல்போன் எண்ணுக்கு நபர் ஒருவர் கடந்த 4 மாதங்களாக அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அந்த நபர், பரமத்திவேலூர் பேருந்து நிலையதிற்கு தனியாக வரவேண்டும் என்றும், அப்படி வரவில்லை என்றால் ஆபாச புகைப்படங்களுடன் அவரது வீட்டிற்கு வர நேரிடும் என மிரட்டியுள்ளான்.
இதையடுத்து பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்திற்கு உறவினர்களுடன் சென்று, அந்த நபரிடம் பெண் பேச்சு கொடுத்து உள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த பெண்ணின் உறவினர்கள் அந்த நபரைப் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவன் திருநெல்வேலி மாவட்டம் என்.கே.புதூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பதும், கோவையில் கணக்காளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. ஃபேஸ்புக்கில் உள்ள பெண்களிடம் பழகி அவர்களது செல்போன் எண்களைப் பெற்று, அவர்களது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவர்களுக்கே அனுப்பவதோடு, ஆபாசமான குறுந்தகவல்களையும் தொடர்ந்து அனுப்பி வருவதை வெங்கடேஷ் வாடிக்கையாக கொண்டுள்ளான். கடந்த 5 ஆண்டுகளாக சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்களுடன் பழகி செல்போன் எண்களை பெற்று மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்களை அனுப்பி அவன் தொந்தரவு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
வெங்கடேஷ்ன் மிரட்டலுக்கு பயந்து வரும் பெண்களை விடுதிக்கு அழைத்து சென்று, அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு, அதனை செல்போனில் பதிவு செய்து பணம் பறிப்பதையும் வெங்கடேஷ் வாடிக்கையாக்கியுள்ளான். இதையடுத்து அவனைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர்.
சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் தங்கள் செல்போன் எண்களை அறிமுகம் ஆகும் நபரின் முழு விவரம் தெரியாமல் பகிர்வது ஆபத்தில் முடியும் என்பது இந்த சம்பவம் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்களை அனுப்பினால் உடனடியாக பெண்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலம் காவல் நிலையத்தை அணுக வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.