இந்த ஆண்டின் சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!
இந்த ஆண்டு (2023) இந்த ஆண்டு பல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பல நல்ல ஸ்மார்ட் ஃபோன்களை வெளியிட்டு இருந்தது. அதில் இந்த ஆண்டு வெளியான போன்களில் எந்த போன்கள் மக்கள் வாங்கலாம் என குறைந்த பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை வந்த சிறந்த 5 சூப்பரான போன்களை பற்றி பார்க்கலாம்.
Xiaomi Redmi A2
Xiaomi Redmi A2 போன் குறைவான பட்ஜெட்டில் எடுக்க ஒரு நல்ல ஸ்மார்ட் போன் என்று கூறலாம். இந்த போனின் விலை ரூ. 5,499. இந்த பட்ஜெட்டில் இந்த போன் இருப்பதால் கண்டிப்பாக இந்த போனை வாங்கலாம். இந்த போன் 5,000 mAh பேட்டரியை கொண்டுள்ளது.
OnePlus Nord CE 3 Lite 5G
ஒன் பிளஸ் போன் பலரும் வாங்க விரும்புவது உண்டு. அப்படி ஒன் பிளஸ் விரும்புபவர்களுக்காகவே வந்துள்ள போன் தான் ‘OnePlus Nord CE 3 Lite 5G’. இந்த போனின் விலை ரூ.19,999 ஆகும். இந்த போன் 5,000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. 108MP பின் கேமரா மற்றும் 16MP முன் கேமராவையும் இந்த போன் கொண்டுள்ளது. 20,000 பட்ஜெட்டில் ஒரு நல்ல போன் வாங்கவேண்டும் என்றால் இந்த போனை நீங்கள் வாங்கலாம்.
‘OnePlus Nord CE 3 Lite 5G ‘ போனின் முழு விவரம்
Poco F5
போக்கோ போன் உபயோகம் செய்பவர்களுக்கு என்று தனி ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களுக்காகவே இந்த ஆண்டு போக்கோ கொண்டு வந்த போன் தான் Poco F5. இந்த போனின் விலை தற்போது 26,000 ஆகும். இந்த போன் 5,000mAh பேட்டரி வசதி மற்றும் 67 வாட்ஸ் சார்ஜிங்குடன் வருகிறது. அமோல்ட் டிஸ்ப்ளே உடனும் இந்த போன் வருகிறது. 63mp பின் கேமராவையும், 8mp பின் கேமராவையும் கொண்டுள்ளது.
Samsung Galaxy S22
Galaxy S22 போன் இந்த வருடத்தில் வெளிவந்த சிறந்த சிறிய ஆண்ட்ராய்டு போன்களில் ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் கைக்கு அடக்கமாக அதாவது ஒரு கையால் பயன்படுத்த எளிதான அம்சத்தை இந்த போன் கொண்டுள்ளதால் பலரும் வாங்கி உபயோகம் செய்து வருகிறார்கள். இந்த போனின் விலை 38,740 ஆகும். 3,700mAh பேட்டரி வசதியுடன் 25 வாட்ஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. 50 MP முன் கேமரா மற்றும் 10 முன் கேமராவை கொண்டுள்ளது.
Moto Edge 40 5G
மோட்டோ எட்ஜ் 40 போன் 4,400 mAh பேட்டரி மற்றும் 68 வாட்ஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இந்த போனின் விலை ரூ. 26,499 ஆகும். இந்த போன் கொண்டு இருக்கும் எடை தான் பலரையும் கவர்ந்தது. அந்த அளவிற்கு இந்த போன மெல்லியமான தோற்றம் கொண்டுள்ள காரணத்தால் பலரும் வாங்கி இருக்கிறார்கள். 167 கிராம் எடையை இந்த போன் கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரையில் இந்த போன் 50MP முன் கேமராவுடனும், 32MP முன் கேமராவையும் கொண்டுள்ளது.