வெறும் ரூ.15,000 பட்ஜெட்.. கடந்த வாரம் வெளியான டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!

Launch Mobile

சாம்சங், ரெட்மி, போகோ போன்ற ஓவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் வாடிக்கையாளர்ககளைத் தங்கள் பக்கம் இருப்பதற்காக ஒவ்வொரு மாதமும் தாங்கள் தயாரித்த  ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்து வருகிறது. அதில் சில ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் நல்ல பிராஸசர் மற்றும் டிஸ்ப்ளே உடன் வெளியாகிறது அந்த வகையில், கடந்த வாரம் அறிமுகம் ஆகிய ரூ.15,000க்கும் குறைவான பட்ஜெட்டில் இருக்கக்கூடிய அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை நாம் இப்பொழுது காணலாம்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 6.6 இன்ச் டிஸ்பிளே, 5,000mAh பேட்டரி கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் + 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மட்டுமே அறிமுகமாக்கியுள்ளது. கிரிஸ்டல் கிரீன், ஷைனி கோல்ட், டிம்பர் பிளாக் அறிமுகமாகியுள்ள இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி போன், வரும் டிசம்பர் 13ம் தேதி பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது. ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்குரூ.630 வரை 10% தள்ளுபடி உள்ளது.

ரெட்மி 13சி 4ஜி மற்றும் 5ஜி

டிசம்பர் 6ம் தேதி ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு மாடல்களில் அறிமுகமானது. இந்த இரண்டு மாடலிலும் சிப்செட்டைத் தவிர மற்ற அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். அதன்படி மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட் ரெட்மி 13சி 5ஜி போனிலும், மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் ரெட்மி 13சி 4ஜி போனிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 3 ரேம் மற்றும் ஸ்டோரேஜ்  வேரியண்ட்டுகள் ரூ.15,000க்கும் குறைவான பட்ஜெட் விலையில் உள்ளது. இதனை டிசம்பர் 16ம் தேதி எம்ஐ இணையதளம் மற்றும் அமேசானில் வாங்கிக்கொள்ளலாம்.

Read More – 50எம்பி கேமரா..8ஜிபி ரேம்..5000 mAh பேட்டரி.! இந்தியாவில் களமிறங்கியது ரெட்மி 13சி 4ஜி.!

டெக்னோ ஸ்பார்க் கோ 2024

டெக்னோ (Tecno) நிறுவனம் அதன் புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024) என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் டிசம்பர் 4ம் தேதி அறிமுகம் செய்தது. 6.6 இன்ச் டிஸ்பிளே, 13 எம்பி ஏஐ டூயல் கேமரா கொண்ட இது ஒரு மலிவான ஸ்மார்ட்போன் என்பதால் போனின் ஆரம்ப விலை ரூ.7 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது. கிராவிட்டி பிளாக், மிஸ்டரி ஒயிட் ஆகிய வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த போன் 3 வேரியண்ட்களில் உள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் விற்பனைக்கு உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,500 வரை தள்ளுபடி உள்ளது.

Read More – வெறும் ரூ.6,699..8ஜிபி ரேம்..டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்.! இந்தியாவில் அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் கோ 2024.!

போகோ எம்6 ப்ரோ 5ஜி

போகோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G) ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் வேரியண்ட் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகமானது. இதைத்தொடர்ந்து, அதன் 8 ஜிபி ரேம் + 286 ஜிபி இன்டர்னெல் கொண்ட மாடல் நவம்பர் 29 தேதி இந்தியாவில் அறிமுகம் ஆனது. 6.79 இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 4 ஜென் 2 பிராசஸர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பவர் பிளாக், ஃபாரஸ்ட் கிரீன் என இரண்டு வண்ணங்களில் அறிமுகமானது. இந்த 78ஜிபி வேரியண்ட்டுடன் சேர்த்து மூன்று வேரியண்ட்களில் பிளிப்கார்ட்டில் விற்பனைக்குக் கிடைக்கும். கிரெடிட் கார்டுகள் மூலம் போகோ எம்6 ப்ரோ 5ஜி போனை வாங்கினால் 10% வரைத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Read More – ரூ.14,999 பட்ஜெட்டில் 8ஜிபி ரேம்.. 256ஜிபி ஸ்டோரேஜ்..! என்ன போன் தெரியுமா.?

சாம்சங் கேலக்ஸி ஏ05

கடந்த நவம்பர் 29ம் தேதி சாம்சங் நிறுவனம், சாம்சங் கேலக்ஸி ஏ05 என்கிற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி 13சி 4ஜி போனில் இருக்கக்கூடிய மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உள்ளது. லைட் கிரீன், சில்வர் மற்றும் பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 2 வேரியண்ட்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் சாம்சங் இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளது. ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு முழுவதும் செலுத்தினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும். மேலும், கேலக்ஸி ஏ05 போனில் 2 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More – வெறும் ரூ.12,499 பட்ஜெட்..6ஜிபி ரேம்..50 எம்பி கேமரா.! இந்தியாவில் களமிறங்கிய சாம்சங் கேலக்ஸி ஏ05.!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்