பட்ஜெட் விலையில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்.! இந்த வாரம் வெளியான டாப் 5 மாடல்கள்.!

Budget Phones

டிசம்பர் மாதம் தொடங்கியது முதல் ஓவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் அதன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் முதல் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் வரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. இந்த அறிமுகங்களில் முக்கிய சிறப்பம்சமாக புதிதாக அறிவிக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் உள்ளது. இப்போது இந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான பட்ஜெட் விலையில் உள்ள ஸ்மார்ட்போன்களை காணலாம்.

iQOO 12 5G

ஐக்யூ (iQOO) நிறுவனம் கடந்த 12ம் தேதி கேம் சேஞ்சர் ஸ்மார்ட்போனான புதிய ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G)-யை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 6.78 இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் மற்றும் டிரிபிள் கேமரா அமைப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.52,999 விலையில் அமேசானில் விற்பனைக்கு உள்ளது. எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் பயனர்களுக்கு ரூ.3,000 தள்ளுபடியும், ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும் உள்ளது.

Read More – தாறுமாறு விலை..தரமான அம்சங்கள்.! இந்தியாவில் அறிமுகமானது ஐக்யூ 12 5ஜி.!

Lava Yuva 3 Pro

சீன நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக இந்திய நிறுவனமான லாவா (LAVA), பிரீமியம் கிளாஸ் பேக் டிசைன் உடன் 8ஜிபி ரேம் மற்றும் 5000mAh பேட்டரி உடன் லாவா யுவா 3 ப்ரோ (Lava Yuva 3 Pro) போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்பதால் ரூ.8,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லாவா யுவா 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரு மாடல் மட்டுமே உள்ளது. இதை லாவா இணையதளம் மற்றும் லாவா ஸ்டோர்களில் வாங்கிக்கொள்ளலாம்.

Read More – 50எம்பி கேமரா..5,000mAh பேட்டரி.! இந்தியாவில் அறிமுகமான லாவாவின் பட்ஜெட் மாடல்.?

Realme C67 5G

ரெட்மி நிறுவனத்தை போலவே பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரியல்மீ, அதன் சாம்பியன் சீரிஸில் ரியல்மீ சி67 5ஜி (Realme C67 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட் போலவே இருக்கக்கூடிய மினி கேப்ஸுல் 2.0  மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ பிராஸசர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 20ம் தேதி முதல் ரியல்மீ இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் 4 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.13,999  விலையிலும், 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.14,999 விலையிலும் உள்ளது. இன்று இதற்கான ஆரம்ப அணுகல் (Early Access) மதியம் 12 மணிக்கு தொடங்கும். இதில் வாடிக்கையாளர்கள் ரூ.2,000 வரை சலுகைகளைப் பெறலாம்.

Read More – வெறும் ரூ.14,999 பட்ஜெட்.. 6ஜிபி ரேம்..5,000 MAh பேட்டரி.! அறிமுகமானது ரியல்மீ சி67 5ஜி.!

POCO C65

போகோ சி65 (POCO C65) ஸ்மார்ட்போன் இந்தியாவில் நேற்று (டிசம்பர் 15ம் தேதி) அறிமுகம் செய்தது. இதில் 6.74 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா சென்சார்கள் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேட் பிளாக், பேஸ்டல் ப்ளூ ஆகிய நிறங்களில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 18 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது. புதிய போகோ போனை ஐசிஐசிஐ கார்டு மூலம் பணம் செலுத்தி வாஙகினால் ரூ.1,000 உடனடி தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது.

Read More – வெறும் ரூ.8,499 பட்ஜெட்.. 8 ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.! அறிமுகமானது போகோ சி65.!

Vivo X100 Series

விவோ எக்ஸ்100 சீரிஸில் (X100 Series) விவோ எக்ஸ்100 (Vivo X100) மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) என மாடல்கள் உலகளவில் அறிமுகம் நேற்று அறிமுகமானது. இதில் தனித்துவமான விவோ வி3 சிப் 1 ஆனது இணைக்கப்ட்டுள்ளது. அதோடு 6.78 இன்ச் டிஸ்பிளே, 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 100 வாட்ஸ் அல்ட்ரா பாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் வசதியுடன் 5400mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More – 16ஜிபி ரேம்..50எம்பி கேமரா..5,000mAh பேட்டரி.! உலக அளவில் அறிமுகமானது விவோ X100, X100 Pro.!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்