அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட டாப்-10 மொபைல் அப்ளிகேஷன்கள்..!!
தற்போதைய சூழலில் அனைத்துவிதமான செயல்பாடுகளுக்கும் மொபைல் ஆப் உள்ளன. அதிலும் ஆப்களை அதிகம் பயன்படுத்துவதில் இந்தியர்களுக்கு முக்கிய பங்குண்டு. ஆப் அன்னி(App Annie) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி, ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் ஆகியவற்றின் மொபைல் ஆப் பயன்பாட்டில் அதிவேக வளர்ச்சி சந்தையை இந்தியா கொண்டுள்ளது. சமீப ஆய்வுகளின் படி, இந்தியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்கள் குறித்து இங்கே காணலாம்.
பேஸ்புக்(Facebook)
2018ஆம் ஆண்டு முதல் காலாண்டில், இந்தியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்களில் பேஸ்புக் முதலிடத்தில் உள்ளது.
யுசி புரவுசர்(UC Browser)
வாட்ஸ்-அப் அப்ளிகேஷனை பின் தள்ளிவிட்டு, யுசி புரவுசர் 2வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த இலவச புரவுசர் வேக புரவுசிங், டேட்டா சேவிங், விளம்பர தடுப்பான் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
வாட்ஸ்-அப்(WhatsApp)
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப், 3வது இடம் பிடித்துள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் காலாண்டில், பட்டியலில் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
எஃப்.பி மெசஞ்சர்(FB Messenger)
பேஸ்புக் நிறுவனத்தின் மெசேஜ் அனுப்பும் அப்ளிகேஷனாக மெசஞ்சர் திகழ்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டைப் போலவே, 4வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இதில் மெசேஜ் அனுப்பும் வசதியுடன், ஆடியோ மற்றும் வீடியோ காலும் செய்யலாம்
ஷேர் இட்(Share It)
வாடிக்கையாளர்கள் தங்கள் ஃபைல்களை, வேறொரு சாதனத்திற்கு பரிமாற்றம் செய்ய உதவுகிறது. கடந்த ஆண்டு 5வது இடத்தில் இருந்த ஷேர் இட், 2018ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஜியோவின் நேரலை தொலைக்காட்சிகள் இடம்பெற்ற ஜியோ டிவி ஆப், ஆச்சரியத்தக்க வகையில் டாப் 10 பட்டிலில் இடம்பெற்றுள்ளது.
டாப் 10 பட்டியலுக்குள் முதல் முறையாக ஏர்டெல் டிவி புகுந்துள்ளது. குறைவான டேட்டா பயன்பாட்டில் செயல்படும் வகையில் ஏர்டெல் டிவி உருவாக்கப்பட்டுள்ளது.
ஹாட்ஸ்டார்(Hotstar)
டாப் 10 பட்டியலுக்குள் இடம்பெறும் மற்றொரு புதுவரவு ஹாட்ஸ்டார். நேரலை தொலைக்காட்சிகள், நாடகங்கள், திரைப்படங்கள் என ஏராளமானவை இடம்பெற்றுள்ளன.
ஸ்பாம் கால்களை கண்டறிந்து, பிளாக் செய்ய உதவுகிறது. தெரியாத நபர்களிடம் இருந்து அழைப்பு வரும் போது, இணைய வசதி மூலம் அவர்களை எளிதில் கண்டறிய உதவுகிறது