டவுண்லோடில் முதல் இடத்தில் கொடிகட்டி பறக்கும் டிக்டாக் இந்தியர்கள் ஆதிக்கம்
ஆப் ஸ்டோரில் பெருமளவு டவுன்லோடு செய்த செயலிகளிண் பட்டியல் வெளியிடப்பட்டது அதில் முதல் இடத்தை டிக்டாக் செயலி பிடித்துள்ளது.
ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து வீடியோக்களை அதிகளவு பகிர்ந்து கொள்ளும் மற்றும் அதில் அதிக டவுன்லோடுகளை செய்யப்பட்ட செயலியில் டிக்டாக் செயலி பட்டியலில் டாப் 1 இடத்தில் உள்ளது.
இது தொடர்பாக சென்சார்டவர் வெளியிட்ட தகவல் படி இந்த காலாண்டின் படி ஆப் ஸ்டோர் -டிக்டாக் செயலியை சுமார் 3.3 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர்.
மேலும் ஆப் ஸ்டோரில் ஐந்து காலாண்டுகளாக அதிக டவுன்லோடு செய்யப்பட்ட செயலி பட்டியலில் டிக்டாக் தான் முதலிடம் பிடித்துள்ளது.மேலும் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் ஆகியவை இந்த காலாண்டில் செயலியால் அதிகம் டவுண்லோடு செய்யப்பட்ட செயலிகள் ஆகும்.
இதில் ட்விட்டர் 16 ஆவது இடத்தில் உள்ளது.இதில் டிக்டாக் செயலியை இந்தியர்கள் தான் அதிகமாக இன்ஸ்டால் செய்து உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இந்த காலாண்டில் சுமார் 88.6 கோடி பேர் டவுண்லோடு செய்துள்ள நிலையில் நடப்பு காலாண்டில் ஒப்பிடும் போது இது 8.3 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் 99 சதவிகித டவுன்லோடுகள் எல்லாம் ஆண்ராய்டு மூலமாகவே செய்யப்பட்டுள்ளது.