Tiktok: இளம் வயதினரை விழுங்கும் டிக்டாக் ,யூடியூப் ஷார்ட்ஸ் பெற்றோர்கள் கவனம் தேவை !
தற்போது இருக்கும் காலத்தில் ஆறாம் விரலாக எப்போதும் நம் கையில் இருக்கும் மொபைல் போன்கள் பல வகையில் நமக்கு உதவியாக இருந்தாலும் பல பிரச்சனைகளை விளைவிக்கின்றது.
குழந்தைகளும் இளம்வயதினரும் டிக்டாக், யூடூயூப் போன்ற செயலிகளில் அதிக நேரம் செலவிடுவதால் உடலளவிலும் மனதளவிலும் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது.இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டிருந்தாலும்,அதற்கு மாற்று என்று சொல்லும் பல செயலிகளும் நம் குழந்தைகளை அடிமைப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறது.
சீனாவின் வீடியோ செயலி டிக்டாக் ஜூன் 2016 இல் தொடங்கப்பட்டது , இந்த செயலியில் 4 முதல் 18 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக செலவிடும் நேரத்தின் அடிப்படையில் கூகுளுக்குச் சொந்தமான யூடூயூப் ஐ மிஞ்சத் தொடங்கியுள்ளது.
டிக்டாக்கில் வரும் விளம்பரங்கள் குழந்தைளை கவர்ந்து இழுப்பதாகவும், ஆபத்தை விளைவிக்கும் சவால்களின் மூலம் இளம் வயதினரை மாற்று பாதைக்கு அழைத்து செல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் டிக்டாக்கில் ஒரு நாளைக்கு சராசரியாக 99 நிமிடங்கள் மற்றும் யூடியூப்பில் 61 நிமிடங்கள் செலவிட்டுள்ளனர்.
UK இல், டிக்டாக் பயன்பாடு ஒரு நாளைக்கு 102 நிமிடங்கள் வரை இருந்தது, யூடியூப்பில் 53 நிமிடங்களை செலவிடுகின்றனர். உலகளவில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் யூடியூப்பில் 56 நிமிடங்களும், டிக்டாக்கில் தினசரி சராசரியாக 91 நிமிடம் செலவிடுவதாக ஆய்வு வெளியாகியுள்ளது.
இரண்டு வருடத்திற்கு முன் வெளியான யூடியூப் ஷார்ட்ஸ் எனப்படும் குறுகிய-வீடியோ இயங்குதளத்தையும் யூடூயூப் கொண்டுள்ளது, இது கடந்த மாதத்தில் 1.5 பில்லியன் புதிய பயனர்களை தாண்டியுள்ளது . யூடியூப் ஷார்ட்ஸ் பயனர்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மட்டுமல்லாமல் எல்லா வயதினரையும் சேர்ந்தவர்கள் பார்க்கிறார்கள்.
குழந்தைகள் மற்றும் இளம் வயதினர்களின் நலன் கருதி இந்தியாவில் கடந்த வருடம் டிக்டாக் தடைசெய்யப்பட்டது. இந்த செயலியில் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர்களின் பார்வை அனுபவத்தை மேலும் பாதுகாக்க ’18 வயதிற்குட்பட்டவர்களின் பாதுகாப்பு நிலைகள்’ அம்சத்தை கடந்த புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
வரும் வாரங்களில், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் வீடியோக்களை 3-17 வயதுக்குட்பட்டவர்கள் பார்ப்பதை தடுக்க உதவும் வகையில் புதிய அம்சத்தின் ஆரம்பப் பதிப்பை டிக்டாக் செயலி அறிமுகப்படுத்தும் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.